மேலும் அறிய
Sivakumarin Sabhadham Pics: சிவகுமாரின் சபதம் ஸ்பெஷல் க்ளிக்ஸ்

சிவகுமாரின் சபதம்
1/6

துள்ளலான ஹிப்ஹாப் இசையின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் ஹிப்ஹாப் ஆதி பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.
2/6

மீசைய முறுக்கு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து இளம் ரசிகர்களிடம் அதிக ஆதரவை பெற்று வருகிறார். அதே சமயம் தான் ஹீரோவாக நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் சொந்தமாக இசை அமைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
3/6

’சிவகுமாரின் சபதம்’ படம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம், தயாரிப்பு என, ஒரு நியூ ஏஜ் டிஆராக உருவெடுத்து அனைதையுமே ஆதிதான் செய்கிறார் என்பதால் படத்திற்கு தாறுமாறாக எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
4/6

இப்படத்தில் இடம்பெறும் சிவக்குமார் பொண்டாட்டி, பாகுபலிக்கு ஒரு கட்டப்பா மற்றும் தில்லாலங்கடி லேடி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
5/6

இடைவெளிக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், தியேட்டரில் இப்படம் இன்று வெளியானது
6/6

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு திரைப்படமான அன்பறிவு திரைப்படத்தில் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. முதல் முறையாக ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு இருக்கிறது
Published at : 30 Sep 2021 07:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement