மேலும் அறிய
Soundariya Nanjundan: இந்த கியூட் குழந்தை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பிரபலமா இது? யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி, சௌந்தர்யாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சௌந்தர்யாவின் குழந்தை பருவ புகைப்படங்கள்
1/5

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் தான் சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிறந்தார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக சௌந்தர்யா தன்னை ஒரு மாடலாக அறிமுகப்படுத்தினார். இதன் மூலமாக தனது கவர்ச்சியையும் வெளிப்படுத்தினார். இவர், ஒரு சில படங்கள் மூலமாக நன்கு அறியப்பட்டார். அதில், தர்பார், திரௌபதி மற்றும் ஆதித்யா வர்மா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
2/5

இவ்வளவு ஏன் ஓடிடி தளமான ஆஹாவில் வெளியான 'வேற மாறி ஆபிஸ் ' என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சிரீஸில் விஷ்ணுவும் நடித்திருந்தார். இருவரும் நெருங்கிய பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த சீசனில் விஷ்ணு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நிலையில், சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சௌந்தர்யா நஞ்சுண்டன் கலந்து கொண்டார்.
3/5

சௌந்தர்யா தான் டைட்டில் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முத்துக்குமரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கடைசியில் சௌந்தர்யா 2ஆவது இடம் பிடித்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு பிறகு விஷ்ணுவை சந்தித்து தன்னுடைய காதல் வாழ்க்கையை அனுபவிக்க துவங்கியுள்ள சௌந்தர்யா.
4/5

இவர்களின் காதலை சேர்த்து வைத்த பெருமையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் சேரும். பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில் நடந்த பிரீஸ் டாஸ்கின் போது சவுண்டுக்கு கொடுக்க உள்ளே வந்த விஷ்ணுவுக்கு, சவுண்டு தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என புரபோஸ் செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு காதல் படம் பார்த்த நிறைவை கொடுத்தது.
5/5

இந்த நிலையில் தான் சௌந்தர்யாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் அவர் பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படம், மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம், பள்ளி உடையில் பரிசு வாங்குவது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. சவுந்தர்யாவின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 29 Jan 2025 12:37 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement