மேலும் அறிய
Anushka Shetty : போல்ட் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இன்று பிறந்தநாள்!
Anushka Shetty : இன்றைய நடிகைகளுக்கு ட்ரெண்ட் செட்டராக விளங்கும் நடிகை அனுஷ்கா இன்று பிறந்தநாள் காண்கிறார்.

நடிகை அனுஷ்கா ஷெட்டி
1/6

2005 ஆம் ஆண்டில் சூப்பர் எனும் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. அதனை தொடர்ந்து மாதவனுடன் ரெண்டு என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அனுஷ்காவிற்கு, அருந்ததி படம் திருப்புமுனையாக அமைந்தது. ஜெக்கம்மா எனும் போல்டான கதாபாத்திரத்தையும் அருந்ததி எனும் மென்மையான கதாபாத்திரத்தையும் கையாண்டது கத்தியின் மேல் நடப்பதற்கு சமம் என்றே சொல்லலாம். அந்த கதாபாத்திரத்தை இவரை தவிர யாரும் செம்மையாக செய்திருக்க முடியாது எனும் அளவுக்கு அக்மார்க் முத்திரை பதித்தார்.
3/6

இப்போது இருக்கும் ஹீரோயின்கள் படக்கதையில் எதற்கு இருக்கிறார்கள் என்ற நிலை இருக்க, ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்தும் பலரது கவனத்தை ஈர்த்தார். வேட்டைக்காரனில் சுசீலா, சிங்கத்தில் காவியா, வானத்தில் சரோஜா, தெய்வ திருமகளில் அனுராதா, தாண்டவத்தில் டாக்டர் மீனாட்சி, என்னை அறிந்தாலில் தேன் மொழி, பாகுபலியில் தேவ சேனா, இஞ்சி இடுப்பழகியில் ஸ்வீட்டி என சூப்பர் கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்தார்.
4/6

படங்களில் அனுஷ்கா ஆடிய நடனத்தின் ஒவ்வொரு அசைவுகளும் பலரது ஃபேவரட்டாக அமைந்தது
5/6

சமீப காலங்களில் கவனத்தை ஈர்க்க தவறிய அனுஷ்காவின் நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி எனும் படம் வெளியானது
6/6

கமல்ஹாசன், வெங்கட் பிரபு போன்று அனுஷ்கா ஷெட்டியும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 07 Nov 2023 12:57 PM (IST)
Tags :
Anushka Shettyமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion