மேலும் அறிய

சமுத்திரகனி நடித்துள்ள தடயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவான ‘தடயம்’, குற்றத்தை ஆராயும் உண்மையான க்ரைம் த்ரில்லர்; பிப்ரவரி 27 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது

 இந்தியாவின் முன்னணி உள்ளூர் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘தடயம்’ (Clue)- குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு – ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் 1999ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த சீரிஸ், ஒரு அதிர்வூட்டும் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தடயம்’ சீரிஸ், அந்த காலகட்டத்தில் எல்லையோர கிராமங்களில் நடு இரவில் நிகழ்ந்த தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டுகிறது. இந்த கொடூர சம்பவங்கள், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும், பதிலற்ற கேள்விகளையும், பல மாதங்கள் நீடித்த மர்மத்தையும் உருவாக்கின. பணம், நகை, கொள்ளை போகவில்லை ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் திருமணத்தின் மிகப் புனிதமான அடையாளங்களான கணவரின் அரைஞாண் கயிறும், மனைவியின் தாலியும் மட்டும் திருடப்பட்டிருந்தன. கொள்ளை எதுவும் நடைபெறாமல் இப்படி நடைபெற்றது, இந்த கொலைகளை இன்னும் அச்சமூட்டுவதாக மாற்றியது. இந்த சீரிஸ் பிப்ரவரி 27 முதல் ZEE5 தமிழில் திரையிடப்பட உள்ளது.

நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள ‘தடயம்’ சீரிஸில், சமுத்திரக்கனி எஸ்ஐ (SI)ஆதியமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஷிவதா இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி வேடத்தில் தோன்றுகிறார். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், கூர்மையான புத்திசாலித்தனமும் உறுதியும் கொண்ட ஒரு காவல் அதிகாரியின் விசாரணையைப் பின்தொடர்கிறது. கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் ஒரு முடிச்சை அவர் கண்டறிகிறார். இந்த கொலைகள் பேராசையால் தூண்டப்பட்டதல்ல. மாறாக, ஆவேசம், சடங்கு நம்பிக்கைகள் அல்லது அதைவிட பயங்கரமான ஏதோ ஒன்றால் நடத்தப்பட்டதாக இருக்கிறது. கிராமங்களைப் பயம் ஆட்கொள்ள, அமானுஷ்யக் கதைகள் பரவ, விசாரணை ஒரு பதற்றமான, பெரும் ஆபத்தான மனித வேட்டையாக மாறி, யாரும் எதிர்பாராத அளவுக்கு இருண்ட உண்மையைக் வெளியே கொண்டு வருகிறது.

தொடரின் இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் கூறியதாவது:

“‘தடயம்’ என்பது ஒரு க்ரைம் த்ரில்லர் மட்டுமல்ல,  நமக்கு நெருக்கமான கிராமிய சமூகத்தில் நிலவும் பயம், நம்பிக்கை, ஆவேசம் ஆகியவற்றை ஆராயும் ஒரு முயற்சியாகும். இந்த உண்மை சம்பவத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அந்தக் குற்றங்கள் எவ்வளவு ஆழமான, உணர்ச்சிப்பூர்வமான, புனிதமான விஷயங்களை இலக்காகக் கொண்டன என்பதுதான். இந்தக் கதையை நேர்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் பார்வையாளரின் மனதில் அழுத்தமாக பதியும் வகையில், அச்சமூட்டும் நிஜத்துடன் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.” அது நிறைவேறியதில் மகிழ்ச்சி. 

எஸ்ஐ (SI) ஆதியமான் வேடத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி கூறியதாவது:

“‘தடயம்’ சீரிஸில் என்னை ஈர்த்தது அதன் உண்மைத்தன்மைதான். இது ஒரு வழக்கமான போலீஸ் கதை அல்ல. பொறுமை, நம்பிக்கை மற்றும் மனித மனதைப் புரிந்து கொள்வது பற்றிய கதை. பயமும் பதிலற்ற கேள்விகளும் நிறைந்த ஒரு சூழலுக்குள் நுழைகிறான் அதிகாரி ஆதியமான். அந்த சிக்கலான மனநிலைதான் இந்த கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக மாற்றியது.”

நடிகை சிவாதா கூறியதாவது:

“இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி வலிமையானவர், உள்ளுணர்வு கொண்டவர், தொடர்ந்து எதிர்கொள்ளும் பயங்கரமான சூழல்களிலும் தளராதவர். ‘தடயம்’ சீரிஸ் அதன் கதாபாத்திரங்களுக்கு  கேள்வி எழுப்பவும், அவர்கள் எதிர்கொள்கின்ற அழுத்தத்தின் பாரத்தை உணரவும் தனித்தன்மையான இடமளிக்கிறது. நிஜத்தன்மையையும், அச்சமூட்டும் சூழலையும் இவ்வளவு சமநிலையாகக் கையாளும் க்ரைம் சீரிஸ் அரிதானது.”

பிப்ரவரி 27 முதல், தமிழ் ZEE5-இல் மட்டும், இந்த அதிர்வூட்டும் உண்மை கதையின் பயங்கர அனுபவத்தை நேரடியாக காணுங்கள்.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget