மேலும் அறிய

இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?

யமஹா நிறுவனத்தின் Yamaha Fascino 125 ஸ்கூட்டரின் தரம், மைலேஜ், விலை ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் யமஹா. இவர்களது பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. யமஹாவின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் Yamaha Fascino 125. இந்தியாவில் இந்த ஸ்கூட்டரின் விற்பனையும் மிகவும் பிரபலமானதாகவே உள்ளது.

இந்த Yamaha Fascino 125 ஸ்கூட்டரில் உள்ள வேரியண்ட் எத்தனை? விலை என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம். இதில் மொத்தம் 9 வேரியண்ட்கள் உள்ளது.

1.Fascino 125 Drum - Hybrid:

யமஹாவின் Fascino 125 Drum - Hybrid ஸ்கூட்டரின் ஆன் ரோட் விலை ரூபாய் 98 ஆயிரத்து 513. இதி்ல் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் வசதி, ப்ளூடூத் வசதி இதில் இல்லை. இதில் 21 லிட்டர் டிக்கி வசதி உள்ளது.  கருப்பு வண்ணத்தில் இந்த ஸ்கூட்டர் உள்ளது.

2. Fascino 125 Drum:

இந்த Fascino 125 Drum ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 642 ஆகும். இதில் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜென் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 24.4 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. வெள்ளை, நீலம், கருப்பு, சிவப்ப என 8 வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் உள்ளது.

3. Fascino 125 Drum Deluxe:

இந்த Fascino 125 Drum Deluxe ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து ஆயிரத்து 657. இதில் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது, இதில் ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 24.4 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. இது அடர் நீலம் மற்றும் நீல நிறத்தில் உள்ளது.

4. Fascino 125 Disc:

இந்த Fascino 125 Disc-ன் விலை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரத்து 955 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி இதில் உள்ளது. ஜிபிஎஸ் வசதி கிடையாது. 24.4 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. பகல் நேரத்தில் வாகனம் இயங்கும்போது வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் நீலம், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட 5 வண்ணங்களில் உள்ளது.

5. Fascino 125 Disc Deluxe:

இந்த Fascino 125 Disc Deluxe ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 980 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி இதில் உண்டு. 24.4 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. நீலம் மற்றும் அடர் நீலத்தில் இந்த ஸ்கூட்டர்கள் உள்ளது. டிஆர்எல் வசதி உள்ளது.

6. Fascino 125 Disc Special Edition:

இந்த Fascino 125 Disc Special Edition ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 882. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் இதில் உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. 24.4 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் உள்ளது.

7. Fascino 125 S - Hybrid:

இந்த ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 882. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. 21 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. டிஆர்எல் வசதி கொண்டது. இந்த ஸ்கூட்டரும் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கொண்டது. 

8. Fascino 125 Disc - Dark Matte Blue Special Edition:

யமஹாவின் Fascino 125 Disc - Dark Matte Blue Special Edition ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து 662. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி இதில் உள்ளது. 24.4 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. டிஆர்எல் வசதி கொண்டது. நீல நிறத்தில் இந்த ஸ்கூட்டர் உள்ளது. 

9.  Fascino 125 S - Hybrid (Colour TFT/ TBT):

யமஹாவின் Fascino 125 S - Hybrid (Colour TFT/ TBT) ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 060 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. நேவிகேஷன் வசதி இதில் உள்ளது. டிஆர்எல் வசதி உள்ளது. சாம்பல் நிறத்தில் இந்த ஸ்கூட்டர் உள்ளது.

மைலேஜ் எப்படி?

இந்த ஸ்கூட்டர் 125 சிசி திறன் கொண்டது. 49 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. பெண்கள், முதியவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 99 கிலோ மட்டுமே எடை கொண்டது. 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி கொண்டது. 8.04 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 10.3 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 255 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

யுபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்க சஸ்பென்சன் வசதி கொண்டது. பின்பக்கம் யுனிட் ஸ்விங் சஸ்பென்சன் வசதி கொண்டது. 24 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடம் வாரண்டி கொண்டது.

தலைப்பு செய்திகள்

Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget