மேலும் அறிய
Ileana: இலியானா குழந்தைக்கு இவர் தான் தந்தையா..? காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை இலியானா..
Ileana: தன் குழந்தையின் தந்தையை வெளி உலக்குக்கு காட்டாமல் ரகசியமாக வைத்திருந்த இலியானா, டேட் நைட் என்ற பெயரில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இலியானா
1/6

தமிழ் திரையுலகில் தமன்னா நடித்த கேடி படத்தின் மூலம் அறிமுகமான இலியானா விஜய் நடித்த நண்பன் படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்டார். அடுத்தடுத்து தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் அவரின் கவனம் பாலிவுட்டில் திரும்பியது. இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா காதல் விவகாரங்களில் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டார்.
2/6

2018-ஆம் ஆண்டு இலியானா, வெளிநாட்டு புகைப்பட கலைஞரை காதலிப்பதுடன், அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. சில மாதங்களில் இருவருக்கும் பிரேக்கப் ஆனதாக கூறப்பட்டது.
3/6

2022ம் ஆண்டு மாலத்தீவு சென்ற இலியானா இந்தி நடிகை காத்ரினா கைஃபின் சகோதரர் செபாஸ்டியன் லாரண்ட் மிச்சேலுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. அதற்கு மறுப்பு கூறாத இலியானா மௌனமாக இருந்தார்.
4/6

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக டீ-ஷர்ட் மூலம் அறிவித்தார். அதன் பின்னர் பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு தான் உண்மையாக கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
5/6

ஆனால், கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை மட்டும் கூறாமல் ரகசியமாக வைத்திருந்தார். யார் அந்த ரகசியக் காதலர் யார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிளர் போட்டோவை வெளியிட்டு இலியானா டிவிஸ்ட் கொடுத்து இருந்தார்.
6/6

இந்த நிலையில், யார் அந்த ரகசியக் காதலர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, தன்னுடைய காதலனின் புகைப்படத்தை இலியானா பகிர்ந்துள்ளார். டேட் நைட் என்ற பெயரில் பகிரப்பட்ட புகைப்படத்தில் இலியானாவுடன் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் உள்ளார். ஆனாலும், அவர் யார், அவரின் பெயர் என்ன என்பது குறித்த எந்த விவரங்களை கூறாமல் தொடர்ந்து சஸ்பென்ஸை காட்டி வருகிறார்.
Published at : 17 Jul 2023 04:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement