அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த மாகாணத்தில் யார் வெற்றி, குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி தக்க வைத்த மாகாணங்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவரின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மாகாணங்கள் எவை, ஜனநாயக கட்சி தக்க வைத்த மாகாணங்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.
உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக கருதப்பட்டது.
ஆனால், முடிவுகள் அறிவிக்க தொடங்கியதில் இருந்தே டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்தார். குறிப்பாக, வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன், அரிசோனா, நெவாடா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி உறுதியான உடனேயே, அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில், எந்த கட்சி எங்கு வெற்றி பெற்றுள்ளது, எங்கு முன்னிலையில் உள்ளது என்பதை பார்ப்போம்.
1) அலபாமா - டொனால்ட் டிரம்ப் - 9 எலக்டோரல் வாக்குகள்
2) கென்டக்கி - டொனால்ட் டிரம்ப் - 8 எலக்டோரல் வாக்குகள்
3) வடக்கு டகோட்டா - டொனால்ட் டிரம்ப் - 3 எலக்டோரல் வாக்குகள்
4) அலாஸ்கா - டொனால்ட் டிரம்ப் (முன்னிலை) - 3 எலக்டோரல் வாக்குகள்
5) லூசியானா - டொனால்ட் டிரம்ப் - 8 எலக்டோரல் வாக்குகள்
6) ஓஹியோ - டொனால்ட் டிரம்ப் - 17 எலக்டோரல் வாக்குகள்
7) அரிசோனா - டொனால்ட் டிரம்ப் (முன்னிலை) - 11 எலக்டோரல் வாக்குகள்
8) மைனே - கமலா ஹாரிஸ் - 4 எலக்டோரல் வாக்குகள்
9) ஓக்லஹோமா - டொனால்ட் டிரம்ப் - 7 எலக்டோரல் வாக்குகள்
10) ஆர்கன்சாஸ் - டொனால்ட் டிரம்ப் - 6 எலக்டோரல் வாக்குகள்
11) மேரிலேண்ட் - கமலா ஹாரிஸ் - 10 எலக்டோரல் வாக்குகள்
12) ஓரிகான் - கமலா ஹாரிஸ் - 8 எலக்டோரல் வாக்குகள்
13) கலிபோர்னியா - கமலா ஹாரிஸ் - 54 எலக்டோரல் வாக்குகள்
14) மாசசூசெட்ஸ் - கமலா ஹாரிஸ் - 11 எலக்டோரல் வாக்குகள்
15) பென்சில்வேனியா - டொனால்ட் டிரம்ப் - 19 எலக்டோரல் வாக்குகள்
16) கொலராடோ - கமலா ஹாரிஸ் - 10 எலக்டோரல் வாக்குகள்
17) மிச்சிகன் - டொனால்ட் டிரம்ப் (முன்னிலை) - 15 எலக்டோரல் வாக்குகள்
18) ரோட் தீவு - கமலா ஹாரிஸ் 4 - எலக்டோரல் வாக்குகள்
19) கனெக்டிகட் கமலா ஹாரிஸ் - 7 எலக்டோரல் வாக்குகள்
20) மினசோட்டா - கமலா ஹாரிஸ் - 10 எலக்டோரல் வாக்குகள்
21) தெற்கு கரோலினா - டொனால்ட் டிரம்ப் - 9 எலக்டோரல் வாக்குகள்
22) டெலவேர் - கமலா ஹாரிஸ் - 3 எலக்டோரல் வாக்குகள்
23) மிசிசிப்பி - டொனால்ட் டிரம்ப் - 6 எலக்டோரல் வாக்குகள்
24) தெற்கு டகோட்டா - டொனால்ட் டிரம்ப் - 3 எலக்டோரல் வாக்குகள்
25) கொலம்பியா மாவட்டம் - கமலா ஹாரிஸ் - 3 எலக்டோரல் வாக்குகள்
26) மிசூரி - டொனால்ட் டிரம்ப் - 10 எலக்டோரல் வாக்குகள்
27) டென்னசி - டொனால்ட் டிரம்ப் - 11 எலக்டோரல் வாக்குகள்
28) புளோரிடா - டொனால்ட் டிரம்ப் - 30 எலக்டோரல் வாக்குகள்
29) மொன்டானா - டொனால்ட் டிரம்ப் - 4 எலக்டோரல் வாக்குகள்
30) டெக்சாஸ் - டொனால்ட் டிரம்ப் - 40 எலக்டோரல் வாக்குகள்
31) ஜார்ஜியா - டொனால்ட் டிரம்ப் - 16 எலக்டோரல் வாக்குகள்
32) நெப்ராஸ்கா - டொனால்ட் டிரம்ப் - 5 எலக்டோரல் வாக்குகள்
33) உட்டா - டொனால்ட் டிரம்ப் - 6 எலக்டோரல் வாக்குகள்
34) ஹவாய் - கமலா ஹாரிஸ் - 4 எலக்டோரல் வாக்குகள்
35) நெவாடா - டொனால்ட் டிரம்ப் (முன்னணி) - 6 எலக்டோரல் வாக்குகள்
36) வெர்மான்ட் - கமலா ஹாரிஸ் - 3 எலக்டோரல் வாக்குகள்
37) ஐடாஹோ - டொனால்ட் டிரம்ப் - 4 எலக்டோரல் வாக்குகள்
38) நியூ ஹாம்ப்ஷயர் - கமலா ஹாரிஸ் - 4 எலக்டோரல் வாக்குகள்
39) வர்ஜீனியா - கமலா ஹாரிஸ் - 13 எலக்டோரல் வாக்குகள்
40) இல்லினாய்ஸ் - கமலா ஹாரிஸ் - 19 எலக்டோரல் வாக்குகள்
41) நியூ ஜெர்சி - கமலா ஹாரிஸ் - 14 எலக்டோரல் வாக்குகள்
42) வாஷிங்டன் - கமலா ஹாரிஸ் - 12 எலக்டோரல் வாக்குகள்
43) இந்தியானா - டொனால்ட் டிரம்ப் - 11 எலக்டோரல் வாக்குகள்
44) நியூ மெக்சிகோ - கமலா ஹாரிஸ் - 5 எலக்டோரல் வாக்குகள்
45) மேற்கு வர்ஜீனியா - டொனால்ட் டிரம்ப் - 4 எலக்டோரல் வாக்குகள்
46) அயோவா - டொனால்ட் டிரம்ப் - 6 எலக்டோரல் வாக்குகள்
47) நியூயார்க் - கமலா ஹாரிஸ் - 28 எலக்டோரல் வாக்குகள்
48) விஸ்கான்சின் - டொனால்ட் டிரம்ப் - 10 எலக்டோரல் வாக்குகள்
49) கன்சாஸ் - டொனால்ட் டிரம்ப் - 6 எலக்டோரல் வாக்குகள்
50) வடக்கு கரோலினா - டொனால்ட் டிரம்ப் - 16 எலக்டோரல் வாக்குகள்
51) வயோமிங் - டொனால்ட் டிரம்ப் - 3 எலக்டோரல் வாக்குகள்