Gold Visa: கோல்டன் விசாவை அறிவித்த டிரம்ப்.! அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறலாம்..ஆனாலும் ட்விஸ்ட்
USA Gold Card Visa: அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கு , புதுமையான் திட்டமான கோல்டன் விசா என்கிற திட்டததை கொண்டுவரப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பணம் படைத்தவர்கள் , இந்தியாவில் குடியுரிமை பெறலாம் என்றும், அதற்கு அவர்கள் 5 மில்லியன் டாலர் பணம் கொடுக்க வேண்டும் என்கிற கோல்டன் விசா திட்டத்தை கொண்டுவரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கோல்டன் விசா என்றால் என்ன?, வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நேரத்தில், எதற்காக டிரம்ப் , இவ்வாறு தெரிவித்துள்ளார் என பார்ப்போம்.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாள் முதலே, பல அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார்.குறிப்பாக , அமெரிக்கா , அமெரிக்கர்களுக்கே என்று கொள்கையே செயல்படுத்த ஆரம்பித்தார்.
மேலும், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளால், அமெரிக்காவின் பொருளாதாரம், குடிமக்களுக்கு கிடைப்பது தடைபடுகிறது என தெரிவித்து, சட்டவிரோத குடியேறிகளை , சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் முறையை ஆரம்பித்தார். அதில் ,இந்தியாவும் தப்பவில்லை. அப்போது, இந்தியர்களின் கை-கால் கட்டுபட்டு, அமெரிக்கா திருப்பி அனுப்பிய விதமானது பெரும் கொந்தளிப்பை இந்தியர்களின் மத்தியில் ஏற்படுத்தியது.
க்ரீன் கார்டு:
அமெரிக்காவில், வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெற, கிரீன் கார்டு பெற வேண்டும் . க்ரீன் கார்டு பெற வேண்டுமானால், அங்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் சுமார் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
மேலும், அமெரிக்காவில் பெருமளவு பணத்தை முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் குடியுரிமை பெறும் வகையில், EB 5 விசா திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் பெரும் பணக்காரர்கள் அமெரிக்காவில் குடியேறி, குடியுரிமை பெற்று, தொழில்களை உருவாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது. இதற்கு சுமார் 1 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்காவின் குடியுரிமையை எளிமையாகவும், காலதாமதமின்றி பெறலாம் என கூறப்படுகிறது.
Also Read: வாங்க மோடி, வரேன் டிரம்ப்.! அன்பு மட்டுமல்ல அலர்ட்டாக இருந்த 2 தலைவர்கள்: டாப் 5 முடிவுகள்..
கோல்டன் விசா:
இந்நிலையில், கோல்டன் விசா என்கிற திட்டத்தை கொண்டுவர போவதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். அது என்ன என்று பார்ப்போம். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளதாவது,“ கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், வெளிநாட்டவர்கள் 5 மில்லியன் டாலர் ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 43 கோடி ) கொடுத்து அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், போலியான் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு EB 5 விசா திட்டம் மூலம் வருவது தடுக்கப்படும் . பணக்காரர்கள் , அமெரிக்காவில் குடியேறுவதன் மூலம், அதிக வரி செலுத்துவார்கள், இதன் மூலம், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அமெரிக்கா , மேலும் வளர்ச்சி அடையும் என தெரிவித்தார்.
கோல்டன் விசா குறித்தான விரிவான தகவல்கள் மற்றும் அறிவிப்புகளானது, சில வாரங்களில் வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கோல்டன் விசா திட்டமானது, தற்போதைய முதலீட்டாளர்களுக்கான EB 5 விசா திட்டத்திற்கு மாற்றாக வரும் என்றும் கூறப்படுகிறது.

