தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்!

தமிழக அரசின் 2025- 26ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் பள்ளிக் கல்வித்துறைக்கு 46,767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 2,000 பள்ளிகளில்‌ ரூ.160 கோடியில்‌ கணினி ஆய்வகங்கள்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌.

அரசுப் பள்ளிகளில்‌ ரூ.65 கோடியில்‌, 2,676 பள்ளிகளில்‌ திறன்மிகு வகுப்பறைகளும்‌, ரூ.56 கோடியில்‌ 880 உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்களும்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌.

முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படும். இதற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளில்‌ படிக்கும் மாணவர்களின்‌ இடைநிற்றலைத் தடுக்க, உயர்நிலைப்‌ பள்ளிகள்‌ மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம்‌ உயர்த்தப்படும்‌.

பள்ளிக் கல்வியில்‌ சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும்‌ வகையில்‌ உடற்கல்வி பாடத்திட்டம்‌ மாற்றி அமைக்கப்படும்‌.

20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏஐ, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.