"குண்டு.. துப்பாக்கி.. செயற்கைக்கோள்.." குழந்தைகளுக்கு இப்படித்தான் பெயர் வைக்கனும்..! வட கொரியா உத்தரவிற்கு காரணம் என்ன..?
"bomb", "gun" மற்றும் "satellite" போன்ற தேசபக்தி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வட கொரிய அரசு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவில் வினோதமான உத்தரவுகளை பிறப்பிப்பது வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, "bomb", "gun" மற்றும் "satellite" போன்ற தேசபக்தி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மென்மையான பெயர்களை வைக்க அரசு கட்டுப்பாடு வதித்துள்ளது.
தேசபக்தி பெயர்:
தென் கொரியாவைப் போலவே, ஏ ரை (அன்பானவர்), சு மி (சூப்பர் அழகு) போன்ற அன்பான பெயர்களைப் குழந்தைகளுக்கு சூட்ட வட கொரியாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அனுமதித்து வந்தது. ஆனால், தற்போது, இந்த வகை பெயர்களை கொண்ட மக்கள், தங்களின் பெயரை தேசி பக்தி மற்றும் கொள்கை சார்ந்த பெயர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
பெயரின் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் ஒரே மாறியாக இருக்கும் வகையிலான பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என சர்ச்சைகளுக்கு பெயர் போன வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். இதை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
North Korea orders parents to name their children 'bomb', 'gun', 'satellite' or other suitably 'patriotic' words https://t.co/bHP6cHh0m5
— Daily Mail Online (@MailOnline) December 1, 2022
பெயரின் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் ஒரே மாறியாக இல்லாத பெயர்கள் சமதர்மத்திற்கு எதிரான பெயர்கள் என கிம் ஜாங் உன் நம்புவதாக கூறப்படுகிறது. அதிபரின் புதிய உத்தரவு குறித்து பேசிய வட கொரியவாசி, "அரசு தரப்பில் பெயர் மாற்றம் செய்ய அதிகாரிகள் வற்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பெயர்கள் திருத்த உத்தரவு:
இறுதியில் மெய் எழுத்துக்கள் இல்லாத அனைத்துப் பெயர்களையும் திருத்தும்படியான அறிவிப்புகள் குடியிருப்பாளர்களின் கூட்டங்களில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து வழங்கப்பட்டன.
பெயரின் இறுதியில் மெய்யெழுத்து இல்லாத பெயர்களைக் கொண்டவர்கள், புரட்சிகர கொள்கைக்கு ஏற்ப தங்கள் பெயருக்கு அரசியல் அர்த்தங்களைச் சேர்க்க இந்த ஆண்டு இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சோசலிச எதிர்ப்பு பெயர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற நீதித்துறை ஆணையத்தின் உத்தரவு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு குடியிருப்போர் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.
எல்லைப் பகுதியில் வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து வட கொரிய, தென் கொரிய நாடுகளுக்கு இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தென் கொரியாவில் உள்ள பெயர்களைப் போல இருக்கக்கூடாது என்று வட கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.