PM Modi: நாடாளுமன்றத்திற்கு வாங்க.. உங்க உரையை தாங்க.. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா!
2016க்கு பிறகு பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
வருகின்ற ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாட இருக்கிறார். இதுகுறித்து, அமெரிக்க உயர்மட்ட மாநாட்டு தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வருகின்ற ஜூன் 22ம் தேதி 4 நாள் பயணமாக அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச இருப்பதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து 22ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவில் ஜில் பைடன் பிரதமர் மோடிக்கு இரவு இருந்து அளிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இன்று யுனைடெட் ஸ்டேட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், “யுனைடெட் ஸ்டேட்ஸ் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேட்டிவ்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் செனட்டின் இரு கட்சி தலைமையின் சார்பாக, ஜூன் 22, 2023 வியாழன் அன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உங்களை அழைப்பதில் எங்களுக்கு பெருமை.
உலக அமைதி மற்றும் செழுமைக்கான நமது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உங்கள் உரையின்போது, இந்தியாவின் எதிர்காலத்திற்கான உங்களின் பார்வையை பகிர்ந்து கொள்ளவும், நமது இரு நாடுகளும் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களைப் பற்றி பேசவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நீங்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பை ஆழமாக்கியது. அந்த உரையில் நீங்கள் கூறியது போல்: "நமது உறவு ஒரு முக்கியமான எதிர்காலத்திற்கு முதன்மையானது. கடந்த காலத்தின் இடர்ப்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, எதிர்காலத்தின் அடித்தளங்கள் உறுதியாக தெரிகின்றன" வரவிருக்கும் ஆண்டுகளில் நமது நாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மீண்டும் ஒருமுறை, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்புறவைக் கொண்டாடுவதற்காக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நமது நாடுகளுக்கும் உலகிற்கும் ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம்.” என பதிவிட்டு இருந்தது.
It is my honor to invite @PMOIndia@narendramodi to address a Joint Meeting of Congress on Thursday, June 22nd.
— Kevin McCarthy (@SpeakerMcCarthy) June 2, 2023
This will be an opportunity to celebrate the enduring friendship between the United States and India and speak to the global challenges our countries both face. pic.twitter.com/gu68UjJltG
உரை:
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றும் மரியாதை பொதுவாக அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உலகின் முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
2016க்கு பிறகு பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். கடந்த 1949 ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு, அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றி, இந்தியாவின் முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.