Trump Vs Biden: இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இந்திய தேர்தலில் தலையிட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்றதிலிருந்து பல அதிரடிகளை அரங்கேற்றி வருவது தெரிந்த விஷயம்தான். ஆனால், தற்போது முன்னாள் அதிபர் ஜோ பைடன் மீது அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கான தேர்தல் நிதியை நிறுத்திய அமெரிக்கா
அமெரிக்க அரசின் செயல்திறனை அதிகரித்து, செலவுகளை குறைக்கும் நோக்கில், செயல்திறன் துறையை உருவாக்கிய அதிபர் ட்ரம்ப், அதன் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். இதையடுத்து, அத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பல்வேறு நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்டுவந்த 21 மில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
ஜோ பைடன் மீது ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட அதிபர் ட்ரம்ப், இந்தியாவிற்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதை நியாயப்படுத்தி பேசினார். அப்போது, ஜோ பைடன் அரசு இந்தியாவின் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க எதற்காக பணம் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு, ஒருவேளை இந்திய தேர்தலில் தலையிட்டு, வேறு யாரையாவது வெற்றி பெற வைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயன்றிருக்கலாம் என யூகிப்பதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இந்திய அரசிற்கு இது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

