MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ் தோனி எப்போது பேட்டிங் வருவார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்.எஸ் தோனி நேற்றைய போட்டியில் பேட்டிங் இறங்கிய போது ஒட்டுமொத்த சேப்பாக்கமும் அதிர்ந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
எம்.எஸ் தோனி:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ் தோனி எப்போது பேட்டிங் வருவார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
AURA @msdhoni 🥶🔥 pic.twitter.com/RIzjBUERxV
— FAFian™ (@SanthosH_S13) March 23, 2025
போட்டியின் 19 ஒவரில் ஜடேஜா ஆட்டமிழந்த பிறகு தோனி களமிறங்கினார், அவர் மைதானத்தில் உள்ளே நுழைந்தவுடன் டிஜே நீ போட்டு வச்ச தங்க குடம் பாடல் போடப்பட்டது அப்போது மொத்த மைதானமே அதிர்ந்தது. அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
You know the crowd hits peak volume when this gentleman walks in! 😮💨🫰🏻
— Star Sports (@StarSportsIndia) March 23, 2025
Dear #MSDhoni, you were truly missed. 💛#IPLonJioStar 👉 #CSKvMI, LIVE NOW on Star Sports 1, 2 & 3 & JioHotstar! pic.twitter.com/2dVJ5TKAnc
இந்த போட்டியில் இரண்டு பந்துகளை சந்தித்த தோனி ரன் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிக்சர் அடித்து போட்டியை முடித்துக்கொடுப்பார் என்று ரசிகர்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றமாக அமைந்தது.
சென்னை அணி வெற்றி:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று(23.03.25) நடந்தது. இந்த போட்டியில் டாஸில் வெற்றிப்பெற்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது, சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் நூர் அகமது 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
𝙁𝙞𝙣𝙞𝙨𝙝𝙞𝙣𝙜 𝙬𝙞𝙩𝙝 𝙖 𝘽𝘼𝙉𝙂 💪
— IndianPremierLeague (@IPL) March 23, 2025
Rachin Ravindra takes #CSK to a win over #MI with a brilliant maximum 💛
Scorecard ▶ https://t.co/QlMj4G7kV0#TATAIPL | #CSKvMI | @ChennaiIPL pic.twitter.com/rVjsGQOHyD
156 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.1 ஓவரில் இலக்கை எட்டியது, கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் அரைசதம் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக வீரர் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுக்ளை எடுத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

