மேலும் அறிய
கொடூரம்..நண்பர் தலையில் கல்லை போட்டு கொன்ற சக நண்பர்கள் - நடந்தது என்ன?
மது குடிக்கும் போது ஏற்பட்ட வாய்தகராறில் மது போதையில் சக நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்து முட்புதரில் உடலை தூக்கி போட்டுவிட்டு சென்ற கொடூரம்.

நண்பர் தலையில் கல்லை போட்டு கொன்ற சக நண்பர்கள்
Source : ABPLIVE_AI
விழுப்புரம்: விழுப்புரத்தில் நண்பர்கள் மூவரும் மது குடிக்கும் போது ஏற்பட்ட வாய்தகராறில் மது போதையில் சக நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு முட்புதரில் நண்பனின் உடலை தூக்கி போட்டுவிட்டு சென்ற கொடூர சம்பம் அரங்கேறியுள்ளது. கொலை செய்த சக இரு நண்பர்களை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் தகராறு - வாலிபர் கொலை
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் திருக்குறிப்பு தொண்டர் நகர் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளிகளான ரஞ்சித் (42) அருண்குமார் மற்றும் முரளி ஆகிய மூன்று நண்பர்களும் நேற்று மாலை மது குடிக்க வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இரவு வெகு நேரமாகிய ரஞ்சித் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காததால் உறவினர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தலையில் கல்லை போட்டு கொலை
அந்த புகாரின் பேரில் முரளி அருண்குமாரை போலீசார் அழைத்து விசாரனை செய்ததில் சித்தேரிக்கரை டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்த போது நண்பர்கள் மூவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த அருண்குமார் முரளியோடு சேர்ந்து ரஞ்சித்தை அடித்து கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்து அங்குள்ள முள் புதரில் உடலை தூக்கி விசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
முட்புதரில் வீசப்பட்ட உடல் - நண்பர்கள் கைது
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முட்புதரில் வீசப்பட்ட ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாலுக்கா காவல் துறையினர் கொலை செய்த அருண்குமார் (32), முரளி (27) ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இதில் அருண்குமார் மற்றும் முரளி ஆகியோர் தங்களது சொந்த வீட்டின் கதவுகளை உடைத்து புடவைகள், வீட்டு உபயோக பொருட்களை திருடிசென்று விற்று அதில் மது வாங்கி குடித்துள்ளது தெரியவந்துள்ளது. குடிக்க அழைத்து சென்ற நண்பனை போதையில் நண்பர்களே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
உலகம்
Advertisement
Advertisement