மேலும் அறிய

விழுப்புரத்தில் காலியான நாம் தமிழர் கட்சி கூடாரம்: அடுத்தடுத்து விலகிய மாவட்ட நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் விலகியுள்ளார்.

விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் விலகியுள்ளார். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் நாதகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...,

நாம் தமிழர் கட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். ஒன்றிய செயலாளர், மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட பொருளாளர், தற்போது நடுவர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தேன். 2 நாடாளுமன்ற தேர்தல், 1 சட்டமன்றத் தேர்தல், 1 உள்ளாச்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக வேலை செய்தோம்.

சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி வாக்கு சேகரிப்பு செய்தேன். கிளை ஒன்றியம், தொகுதி, மாவட்ட பாசறை என அனைத்து கட்டமைனைப்பையும் செய்தேன். நான் செய்த வேலையை விட்டுவிட்டு முழு கட்சி பணிக்காக இறங்கி பணியாற்றினேன். செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் தலைமை பொருட்படுத்தும் படி இல்லை. 2022ல் பிரபாகரன் பிறந்தநாள் செஞ்சியில் நடந்தது. அன்று தான் என் திருமணம் நடந்தது. அதற்காகவே என் திருமணத்தை அன்று நடத்தினேன்.

பிரபாகரன் பிறந்தநாளுக்கு சீமான் வருவார் என எனது மண்டல செயலாளர் மூலமாக கூறியதில் அடிப்படையில் திருமணத்துக்கும் வருவார் என்று திருமணத்தை வைத்தேன். அதற்கு மிக சிரமப்பட்டு எங்கள் மண்டல செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மூலமாக அவரை வரவழைத்தேன். அதுவே எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. கடைசியாக நடந்த நிகழ்ச்சியில் கூட சொன்ன வார்த்தைகள் எனக்கு மன வேதனையை கொடுத்தது. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகிறேன்.

இது நாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கு, உறவினர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் நாதகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சி தலைமை கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தம்ழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகிகள் வருகைபுரிந்து உள்ளே சென்ற போது கட்டாயம் நிர்வாகிகள் யாரும் செல்போன்களை உள்ளே எடுத்து செல்ல கூடாதென சீமானின் தம்பிகள் தடுத்தனர். செல்போன்களை அனைவரும் டோக்கன் பெற்று இங்கே செல்ப்போன்களை கொடுத்து விட்டு கூட்டம் முடிந்தபின் மீண்டும் செல்போன்களை வாங்கி செல்லுங்கள் என கூறினர்.
 
நிர்வாகிகள் ஏன் எடுத்து செல்லகூடாதென கேட்டபொழுத்து சீமான் அண்ணனின் உத்தரவு ஆகையால் கொடுத்து செல்லுங்கள் என்றவுடன் கட்சி நிர்வாகிகளும் அமைதியாக செல்போன்களுக்கு டோக்கன் போட்டுக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்திருந்தனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது சீமான் நிர்வாகிகளிடம் கடுமையாக பேசுவதை சிலர் வீடியோவாக எடுப்பதால் சர்ச்சை ஏற்படுவதால் செல்போன்களை வாங்கியதாக தகவல் தெரிவித்தனர்.
 
விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தெற்கு, வடக்கு, மாவட்ட பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள், தொழில்நுட்ப பிரிவைபிரிவை சார்ந்த 5 பேர் பதவி விலகி உள்ள நிலையில் 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Beach: இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
ஓடவோ, ஒளியவோ முடியாது: ஆசிரியர்களுக்கு மீண்டும் வரும் பயோமெட்ரிக் பதிவு; எப்போது?
ஓடவோ, ஒளியவோ முடியாது: ஆசிரியர்களுக்கு மீண்டும் வரும் பயோமெட்ரிக் பதிவு; எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Beach: இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
ஓடவோ, ஒளியவோ முடியாது: ஆசிரியர்களுக்கு மீண்டும் வரும் பயோமெட்ரிக் பதிவு; எப்போது?
ஓடவோ, ஒளியவோ முடியாது: ஆசிரியர்களுக்கு மீண்டும் வரும் பயோமெட்ரிக் பதிவு; எப்போது?
"வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்பினால்.. விமானத்தில் செல்ல தடை" மத்திய அமைச்சர் தடாலடி
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Irfan Controversy : மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
Archery World Cup:வில்வித்தை உலகக் கோப்பை! வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
Archery World Cup:வில்வித்தை உலகக் கோப்பை! வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
Embed widget