‘என் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்தி கொண்டதில் நான் பெருமை கொள்கிறேன்’ - ஆளுநர் தமிழிசை
என் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்தி கொண்டதில் நான் பெருமை கொல்கிறேன் - ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: "என் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்தி கொண்டதில் நான் பெருமை கொல்கிறேன்" என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில் , “நான் கடந்த 2009-ல் இருந்து மருத்துவம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன், வேலை இல்லாதவர்கள் தான் அரசியலுக்கு வருவார்கள் என கூறுவார்கள். ஆனால் நான் மருத்துவராக இருந்த போது அதிக வேலை பளு இருந்தது, இருந்த போதும் என்னுடைய ஆசை அரசியலில் வர வேண்டும் என்று. அதான் நான் அரசியலுக்கு வந்தேன், தற்போது ஆளுநராக உள்ளேன்.
நான் தெலங்கானாவில் ஆளுநராக பொறுப்பேற்ற போது இவர் ரொம்ப இளம் ஆளுநர் இவர் எப்படி புதிய மாநிலத்தை பார்ப்பார் என்ற பேச்சுகள் வந்தது, பிறகு கூடுதலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. அப்போது இவர் எப்படி இரண்டு மாநிலங்களை பார்ப்பார் என்ற பேச்சுக்கள் வந்தன, ஆனால் நான் மகப்பேறு மருத்துவர் என்னால் ஒரு குழந்தையையும் நல்ல முறையில் பார்த்து கொள்ள முடியும், இரட்டை குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியும்.
என் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்தி கொண்டதில் நான் பெருமை கொள்கிறேன், இந்த தடுப்பூசி தான் பிற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மருத்துவரை சந்திக்க வரும் நேயாளிகள் மருத்துவர் சொல்வதை கேட்டு கொள்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் கூகுலை பார்த்து மருத்துவருக்கு அறிவுரை தருகிறார்கள், எனவே இப்போதுள்ள மருத்துவர்கள் கூகுலையும் எதிர் கொள்ள வேண்டி உள்ளது” என்றார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்