மேலும் அறிய

விழுப்புரத்திற்கு வருகை தரும் முதல்வர்.. களத்தில் இயங்கிய அமைச்சர் பொன்முடி... ஏன் தெரியுமா ?

திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை 28ம் தேதி முதல்வர் திறந்துவைக்க உள்ளார்.

விழுப்புரம்: தமிழ்நாடு முதலமைச்சர் 28ம் தேதி வருகை புரிந்து முதலில் எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டினையும் பின்னர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை  திறந்துவைக்க உள்ளார்.

திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம்

வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி தேசிய நெடுஞ்சாலை அருகமையில், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் மற்றும் முதலவர் வருகைக்கு ஏற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன்பின்னர், வனத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் 02.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத் கூட்டத்தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்கள்.

மேலும், சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021- 2022 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின்போது முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமான திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின், நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்கள்.

அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில், 1.12.0 ஹெக்டேர் பரப்பளவில், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காசு பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கான நினைவு அரங்கம் 545.00 ச.மீ பரப்பளவில், ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் அரங்கம், நூலகம் மற்றும் பராமரிப்பாளர் அறை, பொதுகழிப்பறை போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம் 782.00 ச.மீ பரப்பளவில், ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம், பராமரிப்பாளர் அறை, பொதுகழிப்பறை போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நினைவு அரங்கம் மற்றும் மணிமண்டபம் கட்டுமானப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க முதல்வர் வருகை

எனவே, விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 28ம் தேதி வருகை புரிந்து முதலில் எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டினையும் பின்னர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை திறந்து வைப்பதோடு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்கள் என வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.

மேலும், விழுப்புரம் மாவட்டதிற்கு வருகை தரும் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொள்வர் என்பதால் அதிகாரிகள், அலுவலக கோப்புகளை தயாரிக்கும் பணியில் தீவிரமா ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget