மேலும் அறிய

இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு மணிமண்டபம்... திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த 1987ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..

விழுப்புரம்:  தமிழகத்தில் கடந்த 1987ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த 21 சமூக நீதி போராளிகளுக்கு, அரசு சார்பில் 5.45 கோடி ரூபாய் மதிப்பில் நினைவு அரங்கமும், முன்னாள் அமைச்சரான, ஏழை மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பங்காற்றிய மறைந்த கோவிந்தசாமிக்கு 4 கோடி ரூபாயில், சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம்

இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டு அறிவித்தார்.

அப்போது முதல்வர் இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுகையில், சமூக நீதியின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இட ஒதுக்கீடு, சாதிரீதியான இட ஒதுக்கீடு என எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் அதனை சமூக நீதி என்ற ஒற்றைச் சொல் கொடுக்கும் பொருளை வேறு எந்தச் சொல்லும் தருவது கிடையாது. சமூக நீதிக் கொள்கைதான் திராவிட இயக்கம் இந்த தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே அந்தத் தத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது. வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீடு உரிமையை 100 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்குக் கொண்டுவந்தது நீதிக்கட்சி தான்.

மூடப்பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள் அனைத்தும், அதன் மூலம் அனைவருக்கும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் அதற்கு இடர்ப்பாடுகள் வந்தபோது பெரியாரும் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டம் இந்தியத் துணைக்கண்டத்தையே கவனிக்க வைத்தது. காமராஜர், அன்றைக்கு பிரதமராக இருந்த நேருவிடம் வலியுறுத்தியதன் காரணமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

அப்படி சமூக நீதியை அடையப் பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றத்தைப் பெற்றுத் தந்ததும், கடந்த அரை நூற்றாண்டு கால சரித்திரச் சான்றை மறைக்க முடியாத சாசனமாக அமைந்திருக்கிறது. சமூக நீதிக்கான போராட்டத்துக்கான தொடர்ச்சியான வரிசையில் 1987-ம் ஆண்டு நடைபெற்ற 20% தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 21 பேர்.

சமூக நீதிப் போராளிகளான அவர்களின் உயிர் தியாகத்துக்கும் போராட்டத்துக்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989-ம் ஆண்டு அமைந்த கருணாநிதி அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை வழங்கி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்களின் முன்னேற்றத்துக்கான பாதையை வகுத்துத் தந்தது திமுக அரசு.

சமூக நீதிக் கொள்கையின் தொடர்ச்சியாக கலைஞர் கருணாநிதி வழியில் செயல்படக்கூடிய திமுக அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மீட்கப்பட வேண்டும், என்பதே திமுக அரசின் உயர்ந்த நோக்கமாகும். அத்தகைய தியாகிகளின் பங்களிப்பினை நினைவுகூர்ந்து, 1987-ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கும் வகையில், ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

இது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் அளித்த வாக்குறுதி. யார் மறந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை. 'நான் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவன். மிகவும் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடமுண்டு. நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால், பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையும் பணயம் வைத்துப் போராடுவேன்' என்று சட்டப்பேரவையில் கருணாநிதி சொன்ன உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இட ஒதுக்கீடு போராளிகள்

பாப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன்,  பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய  21 பேரும் போலீஸாரின் அடுக்குமுறைக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் இரையாகினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget