இதை திமுக மட்டும் சொல்லவில்லை; அண்ணாமலைக்கு புரியல – திருப்பி அடித்த திருமா
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் இந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் இந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் பதிலளித்தார்.
சாதிய ஆணவப் படுகொலைக்கு திருமாவளவன் தான் காரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் “ஹெச்.ராஜாவின் பேச்சை யாரும் பொருட்படுத்துவதில்லை. பாஜகவிலேயே யாரும் அவரை கண்டுகொள்வதில்லை என்பதுதான் உண்மை. கவன ஈர்ப்புக்காக அவர் பேசுகிறார். அவரின் கூற்றை மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. தமிழர்களால் அல்ல என மகாராஷ்டிரா ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “அப்படி பார்த்தால் இந்தியாவே பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்டதுதான். சிதறிக்கிடந்த பல பகுதிகளை அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.
நாடு சிதறிக்கிடந்த பகுதிகளை படேல், நேரு போன்றவரகள் ஒருங்கிணைத்தார்கள். இந்தியாவே ஒரு நாடாக உருவாவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்தான் காரணம்” எனத் தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு பற்றி புரிதல் இல்லாமல் பேசிவருவதாக அண்ணமலை கூறியுள்ளார் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த திருமா, “அண்ணாமலை தொகுதி மறுசீரமைப்பு பற்றிய அடிப்படை புரிதல் இல்லை. அவருக்கு ஏதேனும் புரிதல் இருந்தால் இந்த கருத்தை அவர் கட்டாயமாக வரவேற்பார். இதில் உள்ள பிரச்சினையை புரிந்துகொள்வார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு தொகுதிமறு வரையறை பற்றிய சூழல் எழுந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்தால் தென் இந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும். இதுப்பற்றி அரசியல் வல்லுநர்களே சொல்கிறார்கள். திமுக மட்டும் பேசும் கருத்து அல்ல. அனைத்து கட்சியினரும் மத சார்பற்று பேசும் கருத்து. அது அண்ணாமலைக்கு புரியவில்லை” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

