ரம்ஜானை ஒட்டி திருச்சி- சென்னைக்கு சிறப்பு ரயிலு இயக்குறாங்க... உடனே புக் பண்ணிக்கோங்க
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருச்சி-சென்னை தாம்பரம் இடையே மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு ரயில் இயக்குறாங்க... மக்களே நோட் செய்து கொள்ளுங்க. ரம்ஜான் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி திருச்சி-சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருச்சி-சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருச்சி-சென்னை தாம்பரம் இடையே மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக கருதப்படும் ரம்ஜான் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் அந்த மாதம் முழுவதும் நோன்பு வைத்து தொழுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த இரண்டாம் தேதி துவங்கிய ரமலான் மாதம் வருகின்ற மாதம் 30 ஆம் தேதி பிறை தோன்றுவதுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி- சென்னை தாம்பரம் இடையே மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வருகின்ற மார்ச் 29ம் தேதி, 30ம் தேதி, 31ம் தேதிகளில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி- சென்னை தாம்பரம் சிறப்பு ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் மாலை 3:45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் இரவு 10:40 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயணிகளின் நலனுக்காவும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது.
இதே போல ரம்ஜான் பண்டிகைக்காக சென்னை-போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தங்கி வேலை பார்க்கும் இஸ்லாமியர்களுக்கு இந்த சிறப்பு ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே மிஸ் பண்ணாம பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட உடனே சிறப்பு ரயிலுக்கு புக் பண்ணிக்கோங்க.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

