வேலைக்காக வெளிநாடு சென்று தவித்த இளைஞர்கள் இதுவரை 1200 பேர் மீட்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - திருச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
திருச்சியில் இன்று கலாச்சார நட்புறவு கழக தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஸ்தான் கூறியதாவது: தமிழகத்திலிருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகள் சென்று தவித்த 1200 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் கம்போடியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து 64 பேர் மீட்டுவரப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களின் முழு விமான கட்டணம் உள்ளிட்ட முழு செலவினங்களையும் மனிதநேயத்தோடு தமிழக முதலமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளார்.
வெளிநாடுகள் சென்று தவித்த 1200 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் கம்போடியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து 64 பேர் மீட்டுவரப்பட்டுள்ளனர்.- அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி@GingeeMasthan @abpnadu #Trichydistrict pic.twitter.com/D9ffCs5JgH
— Dheepan M R (@mrdheepan) November 19, 2022
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தாங்கள் வேலைக்கு செல்லும் நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னர் செல்ல வேண்டும். திருச்சியில் கூட வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பி ஏமாற்றிய 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள். தமிழக அரசு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களை அழைத்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் இதுவரை 181 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது இங்கிலாந்துக்கு 500 செவிலியர்களை அனுப்ப தேர்வு செய்து அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. என்.ஆர்.சி. கணக்கெடுப்பு பணி வட மாநிலங்களில் நடைபெறுவதாக சொல்கிறீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக இந்தியா இருக்கிறது. தமிழக முதலமைச்சரும் இதனை வலியுறுத்தி வருகின்றார்” என தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்