மேலும் அறிய

திருச்சி: விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம்,  முசிறி தாலுகா தும்பாலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தம்மாள் தம்பதி குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தனர். முருகேசனின் அண்ணன் அண்ணாவி (62), தம்பி பெரியசாமி (48). இவர்களுக்கு, அவரது தந்தை கருப்பண்ணன் தனது சொத்தை பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன்-தம்பிகள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந்தேதி அன்று மதியம் முருகேசன், தனது மனைவி கோவிந்தம்மாள், மகன் சுதாகர், மகள் நதியா ஆகியோருடன் தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அண்ணாவி, பெரியசாமி, அண்ணாவியின் மகன் சத்யராஜ் (29) ஆகிய 3 பேரும் அங்கு வந்து முருகேசனுடன் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் முருகேசன், கோவிந்தம்மாள், சுதாகர் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இது குறித்து கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின்பேரில் முசிறி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சத்யராஜ், அண்ணாவி, பெரியசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி: விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை திருச்சி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்தை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். இதில் முருகேசனை கொலை செய்த குற்றத்துக்காக சத்யராஜ், அண்ணாவி, பெரியசாமி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் கோவிந்தம்மாளை தாக்கிய குற்றத்துக்காக சத்யராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, அண்ணாவிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் மேலும் இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் அரசு வக்கீல் பாலசுப்பிரணியன் ஆஜர் ஆனார். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
Embed widget