மேலும் அறிய

South TN Rains: சென்னை மழையுடன் ஒப்பிடக்கூடாது! தென் மாவட்ட மழையால் 10 பேர் உயிரிழப்பு - தலைமைச் செயலாளர் பரபரப்பு

South TN Rains: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெரு மழையில்  விமானப்படை, கடற்படை உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 

 தென் தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம், மின்சாரம் தாக்கியது உள்ளிட்டவைகளால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா (Shiv Das Meena) தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெரு மழையில்  விமானப்படை, கடற்படை உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தென் தமிழ்நாடு மாவட்டங்களில் பெரும் மழை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக நேற்று பெய்த மழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

பல்வேறு கிராமங்களில் நீரில் மூழ்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளது. அணைகள், ஏரி ஆகியவை நிரம்பியுள்ளனர். அதீத கனமழை, வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தண்ணீர் வடிய தொடங்கியுள்ள நிலையில், பொது போக்குவரத்து நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலர் அளித்த பேட்டியின் விவரம்:

சென்னை - தென் தமிழ்நாடு மாவட்ட பெருமழையை ஒப்பிட முடியாது:

சென்னையில் வெள்ள நிர்வாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவ்தாஸ் மீனா,”சென்னையில் ஏற்பட்ட புயல், மழை ஆகியவற்றையும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் ஒப்பிட முடியாது. ஏனெனில் சென்னை நகர அமைப்பு கொண்டது. இங்கே ஒரு கிராமத்திற்குள் செல்வதே சிரமாக இருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி விமான நிலையம் அருகில் உள்ள சாலை என எல்லாம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. கிராமங்களுக்குள் உள்ளவர்கள் தொடர்பு கொள்வதில் சிக்கல்.

பெருமழை, தொடர்ந்து மழை பெய்தது எல்லாம் நிவாரண பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமமாக அமைந்தது. இங்குள்ள டவர்கள் ஏதும் வேலை செய்யவில்லை. சென்னை என்றால் பல்வேறு நிறுவனங்களின் தொலைத்தொடர்பு டவர்கள் இருக்கும். ஒன்று செயல்படவில்லை என்றாலும் மற்றொன்றை பயன்படுத்தலாம். இங்கே சூழல் முற்றிலும் வேறானாது.” என்று பதிலளித்தார். 

மீட்பு பணிகள் குறித்து பேசுகையில்,” மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது.தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். நெல்லையில் 64,900 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பால் விநியோகத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலியில் 64 ஆயிரத்து 900 லிட்டர் பாலும், தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் பாலும் விநியோகித்துள்ளோம். ஓரிரு நாட்களில் பால் விநியோகம் திருநெல்வேலியில் சீராகிவிடும். தூத்துக்குடியில் கொஞ்சம் நேரம் எடுக்கலாம். ஆனால் பால் பவுடர்கள் விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

”திருநெல்வேலி ஸ்டேசன்ல 23 செ.மீ, காயல்பட்டினத்தில் 21 செ.மீ மழை 18-ம் தேதியன்று பதிவாகியுள்ளது. 18-ம் தேதி காலை ரொமப்வே அதிகம் மழை இருந்த்து. 30 மணி நேரத்தில் வரலாறு காணாத அளவு மழை பெய்திருக்கிறது. இதனால் அனைத்து கடலோர, தாமிரபரணி ஆற்றோர கிராமங்கள், நகரங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 1350 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 16,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.ஸ்ரீவைகுண்டத்திற்கு படகு மூலம் செல்ல முடியவில்லை. அதனால், 9 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 160 நிவாரன முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 16,680 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்கள் தவிர மக்களுக்கு 34,000 உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதிகளுக்குள் படகு மூலம் கூட செல்ல இயலவில்லை. 323 படங்குகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

விரைவில் மின்சார சேவை சீராகும்

”கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்விநியோகம் சீராகியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் இன்னும் வழங்கப்படவில்லை.  மின் விநியோகம் செய்தால் மின்சார பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வடியும்போது படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் 18% ட்ரான்ஸ்ஃப்மாரில் மின்விநியோகம் சீராகிவிட்டது. 12% இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.”என்று பதிலளித்தார்.

நிவாரண உதவிகள் விரைவில் வழங்கப்படும்

நிவராண உதவிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளித்த அவர்,” இப்பொழுது மீட்பு பணிகளில் மட்டுமே முழு கவனம் உள்ளது. தண்ணீர் வடிந்ததும் சேதாரங்கள் கணக்கிடப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனைக்கு பிறகு நிவாரண உதவு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு பற்றி நான் சொல்கிறேன் என்று தொடங்கிய சிவதாஸ் மீனா,” ’அதி மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்திருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, நாங்கள் முன்னெச்சரிக்கையாக தயாரானோம். ஆனால், காயல்பட்டினம் பகுதியில் இரண்டு நாட்களில் சுமார் 115 செ.மீ. மழை. இந்தமாதிரி மழைக்கு எந்த முயற்சி எடுத்தாலும், கடற்கரையில் கப்பல் இருந்தாலும் அதுக்கு நம்ம ஒன்னும் செய்ய முடியாது.” என்று தெரிவித்தார்.

” மழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலியில் 7 பேரும் தூத்துக்குடியில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். சுவர் விழுந்து 4 பேரும், இடி தாக்கி 2 பேரும், வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டவர்கள் 3 பேரும், இயற்கை மரணத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

நாளை விடுமுறை:

மழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர், 20) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நெஞ்சாலையில் அந்தோனியார்புறம் அருகே சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. தற்போது, தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget