தஞ்சையில் பரபரப்பு... காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு
அடிதடி வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர். அதனை கண்டித்து சகோதரிகள் காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை முயற்சி. ஒருவர் உயிரிழப்பு மற்றவர் தீவிர சிகிச்சை.

கதஞ்சாவூர்: நடுகாவிரி காவல்நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச்சென்ற சகோதரரை விடுவிக்கக்கோரி தற்கொலைக்கு இரண்டு சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நடு காவிரி பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரை அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் சாராயம் விற்பனை செய்ய கூறியுள்ளனர். இதனால் அய்யாவு அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அய்யாவு மகன் தினேஷ் நீதான் சாராயம் விற்கிறாய். எதற்கு என் தந்தையும் சாராயம் விற்க கூறுகிறாய் என கூறி கடந்த வெள்ளிக்கிழமை சாராயம் விற்க சொல்லியவர்களை தினேஷ் அடித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அடிதடி வழக்கிற்காக நடுக்காவிரி காவல் ஆய்வாளர் சர்மிளா விசாரணைக்காக தினேஷை அழைத்து சென்றுள்ளார். அப்போது தினேஷின் சகோதரி மேனகா தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதால், தனது சகோதரனை அழைத்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் சகோதரிகளை காவல் ஆய்வாளர் சர்மிளா தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த சகோதரிகள் கீர்த்திகா, மேனகா இருவரும் காவல் நிலையம் முன்பே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த கீர்த்திகா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். ஆபத்தான நிலையில் மேனகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் சர்மிளா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

