மேலும் அறிய

பணப்புழக்கம் இல்லையே... தீபாவளி செலவுகளால் மலைத்து நிற்கும் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் குறுவை பொய்ப்பு, சம்பா சாகுபடி பணிகள் மந்தம் போன்ற காரணங்களால் பணப்புழக்கம் இல்லாததால் தீபாவளி கொண்டாட முடியாமல் குறு, சிறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தவியாய் தவிக்கின்றனர். 

தஞ்சாவூர்: பண்டிகை என்றாலே செலவுகள்தான் முன்னாடி நிற்கும். இருந்தாலும்  அது மகிழ்ச்சியான செலவுதான். அந்த வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததுதான். ஆனால் இந்த தீபாவளி விவாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று என்று கூற முடியாது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை பொய்ப்பு, சம்பா சாகுபடி பணிகள் மந்தம் போன்ற காரணங்களால் பணப்புழக்கம் இல்லாததால் தீபாவளி கொண்டாட முடியாமல் குறு, சிறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கின்றனர். 

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியைப் பொருத்தே தீபாவளி பண்டிகை அமையும். ஆனால், நடப்பாண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால், உரிய காலத்தில் திறக்காமல் கால தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை. ஆழ்துளை மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக குறுவை பருவத்தில் 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு 3.50 லட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே பயிரிடப்பட்டது. இதில், இதுவரை ஏறத்தாழ 80 சதவீதம் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மீதமுள்ள பரப்பளவில் குறுவை அறுவடை தள்ளிப்போகிறது.

இதற்கிடையில் ஒரு போக சம்பா சாகுபடிக்கும் போதுமான அளவுக்கு காவிரி நீர் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், கடைமடைப் பகுதி மட்டுமல்லாமல் இடைப்பட்ட பகுதியிலும் சம்பா சாகுபடிப் பணிகள் மந்தமாகவே உள்ளது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1.60 லட்சம் ஏக்கரில் மட்டுமே நடவு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 சதவீதப் பரப்பில் இன்னும் சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயப்பணிகள் தொடங்கினால் மட்டுமே கிராமப்புறப் பகுதிகளில் பணப்புழக்கம் இருக்கும். தற்போது பணப்புழக்கம் இல்லை என்று விவசாயிகள் தரப்பில் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஆழ்குழாயை நம்பி சாகுபடி செய்த குறுவை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு குறைந்தது 40 மூட்டைகள் மகசூல் கிடைத்தால்தான் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.  35 மூட்டைகள் கிடைத்த நிலையில், மீதமுள்ள பகுதிகளில் பூச்சி தாக்குதல், சில இடங்களில் அதிகமாக பெய்த மழை உள்ளிட்ட காரணங்களால் 30 முதல் 33 மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைக்கிறது.

இடுபொருள் செலவுகள் பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், குறைவான மகசூலால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை. பெரும்பாலான விவசாயிகள் நெல்லை தனியாரிடம் விற்பனை செய்தனர். அந்த தொகை இன்னும் தொகை விவசாயிகளுக்கு வந்து சேராததால், பணப்புழக்கம் இல்லை. இதன் காரணமாக வாங்கும் சக்தி குறைவாக உள்ளதால், புத்தாடைகள் உள்ளிட்ட தீபாவளி செலவுகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறோம்.

இதேபோல, சாகுபடிப் பணிகளில் நிலவும் தொய்வு காரணமாக விவசாய தொழிலாளிடமும் பணப்புழக்ம் இல்லை. குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமைந்து, சம்பா சாகுபடியும் தொடங்கும்போது விவசாய தொழிலாளர்களுக்கு இடைவிடாமல் வேலை கிடைப்பது வழக்கம். ஆனால், இந்த இரண்டிலும் விறுவிறுப்பு இல்லாததால் விவசாய தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்கவில்லை. இதனால் இந்த தீபாவளி எங்களுக்கு மனநிறைவான தீபாவளியாக அமையவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளிலும் நகர மக்களின் வருகை அதிகமாக இருக்கிறதே தவிர, சிறு, குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வருகை குறைவாகவே உள்ளது. இந்நிலையில், கடைசி நேரத்தில் தரைக்கடைகளை நம்பி கூட்டம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget