மேலும் அறிய

குடும்பத்தலைவிகளே உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த மாடித்தோட்டம் கிட்... யார் வழங்குறாங்க தெரியுங்களா?

இந்த கிட்டில் பத்து வகையான காய்கறி விதைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இவை மாடித் தோட்டம் போட நினைப்பவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு ஆகும்.

தஞ்சாவூர்: பொன்னான நேரத்தை வீணடிக்காமல் குடும்ப தலைவிகளின் ஆர்வத்தை உயர்த்தி பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அரசு கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் 'மாடித்தோட்டம்'. மாடித்தோட்டம் 'கிட்' ஒன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறது.

மாடித் தோட்டத்திற்கு அரசு வழங்கும் கிட்

கிட் ஒன்றில் தென்னை நார் கழிவுடன் கூடிய வளர் ஊடகம் அடங்கிய ஆறு பைகள், அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம், சூடோமோனாஸ் 100 கிராம், டி.விரிடி 100 கிராம், நீரில் கரையும் உரம் 18:18:18 ஒரு கிலோ, அசார்டிராக்ஷன் 100 மில்லி, திட்ட விளக்க குறிப்பு, பத்து வகையான காய்கறி விதைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இவை மாடித் தோட்டம் போட நினைப்பவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு ஆகும்.

குடும்பத்தலைவிகளே உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த மாடித்தோட்டம் கிட்... யார் வழங்குறாங்க தெரியுங்களா?

வெண்டைக்காய் சாகுபடி செய்யலாம்

இந்த மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி முறையை பற்றி தெரிந்து கொள்வோம். நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக வெண்டைக்காய் சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றைதான் பார்க்க உள்ளோம்.

மாடித்தோட்டம் வெண்டை சாகுபடியை பொறுத்தவரை, சிறிய பை அல்லது தொட்டிகள் போதுமானது. தேங்காய் நார் கழிவுகள் இரண்டு பங்கு, சமையலறை கழிவுகள் ஒரு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு ஆகியவற்றை கொண்டு தொட்டிகளை நிரப்ப வேண்டும். இந்த கலவையை தயார் செய்தவுடனே விதைகளை விதைத்துவிட கூடாது. ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்கு பின்பு தான் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். 

எப்படி வெண்டைக்காய் செடிகளை வளர்ப்பது?

மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் செடிகளை வளர்ப்பதற்காக, பை அல்லது தொட்டிகளில் மணல் கலவை நிரப்பும் போது, பை முழுவதும் மணல் கலவையை நிரப்பிவிட்டு கூடாது. பையின் நீளத்திற்கு ஒரு அங்குலத்திற்கு கீழ் இருக்குமாறு மணல் கலவையை நிரப்ப வேண்டும். மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரை நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். பின்பு பைகளில் விதைகளை விதைத்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும். ஒரு குழியில் இரண்டு விதைகள் ஊன்றலாம்.

அதிக எண்ணிக்கையில் ஒரு பையில் செடிகள் இருக்கக்கூடாது

நடவு செய்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் துவங்கும். பத்து நாட்களில் நன்றாக முளைத்துவிடும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழியிலும் நன்றாக வளர்ந்துள்ள ஒன்று அல்லது இரண்டு செடியை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு செடியைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும். ஒரு பையில் ஒரு செடியை மட்டும் வைப்பது சிறந்தது. பெரிய பையாக இருந்தால் இரண்டு செடிகள் இருக்கலாம். அதற்கு மேல் அதிக எண்ணிக்கையில் ஒரே பையில் செடிகள் இருக்கக் கூடாது.
நீர் நிர்வாகம் எப்படி மேற்கொள்வது?

மாடித்தோட்டம் வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரை விதை விதைத்த பின்பு, பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்பு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும். வெண்டைக்காய் செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒருமுறை கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது. செடியும் நன்கு காய் பிடித்து வளராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெண்டையில் முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் அடிக்கடி நீக்க வேண்டும்.

பூச்சித்தாக்குதலை போக்க என்ன செய்யணும்?

இதனால் நோய் தாக்கும் அபாயம் குறையும். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து, மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். நடவு செய்த 30 முதல் 35-ம் நாள்களுக்குள் பூவெடுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் முதல் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பஞ்சகவ்யாவைக் கொடுத்து வந்தால், இலைகள் அதிகமாக உருவாகும். 

அதிகப் பூக்கள் பூக்கும். பூவெடுத்ததிலிருந்து ஏழு நாள்களில் காய் உருவாகத் தொடங்கும். பின்னர் ஒன்றரை நாள் இடைவெளியில் அறுவடைக்கு வரும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்கலாம். காய்கள் பிடிக்க ஆரம்பித்த உடன் சரியான பருவத்தில் காய்களை முற்றவிடாமல், பறித்துவிட வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரமாண்டமாக நடந்த மகா சிவராத்திரி விழா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரமாண்டமாக நடந்த மகா சிவராத்திரி விழா
உங்க பருப்பு இங்க வேகாது... மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த துணை முதல்வர் உதயநிதி
உங்க பருப்பு இங்க வேகாது... மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த துணை முதல்வர் உதயநிதி
திருச்சியில் பிரமாண்டமாக தொடங்கிய புத்தக கண்காட்சி... வரும் 22ம் தேதி வரை நடக்கிறது
திருச்சியில் பிரமாண்டமாக தொடங்கிய புத்தக கண்காட்சி... வரும் 22ம் தேதி வரை நடக்கிறது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் சிக்கினார்
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் சிக்கினார்
ABP Premium

வீடியோ

Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ
Shivaji Krishnamoorthy Arrest | 3 ஆண்டுகள் சிறை!சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது?ஆளுநர் குறித்து அவதூறு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வைகோ பரபரப்பு ; திமுக கூட்டணியில் காங்கிரஸின் 'அந்த' கோரிக்கைக்கு இடமில்லை
மம
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார் !
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார்
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?
10th 12th Exam 2026: தேர்வு நேரத்தில் புதிய மாற்றங்கள்! 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வினாத்தாள் பாதுகாப்பு தீவிரம்!
10th 12th Exam 2026: தேர்வு நேரத்தில் புதிய மாற்றங்கள்! 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வினாத்தாள் பாதுகாப்பு தீவிரம்!
Embed widget