மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
சென்னையில் மின்சார வாகனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக சிறப்பு பயிற்சி முகாமை தமிழக அரசு நடத்துகிறது.

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும் மின்சார வாகனங்களின் செயல்பாடு பற்றி அறிந்து கொள்வதற்காக சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 3 நாள் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் ஜுலை 23ம் தேதி மற்றும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாம் சென்னை கிண்டியில் உள்ள ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் நடக்கிறது.
என்ன கற்றுத்தரப்படும்?
1. மின்சார வாகன தொழில்நுட்பத்தை தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.
2. மோட்டார், பேட்டரி கட்டுப்பாட்டு, சார்ஜிங் அமைப்புகள் இயக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சர்வீசிங் முறைகள் மற்றும் அடிப்படை கோளாறுகளை கண்டறியும் திறன், மின்சார வாகன டீலர்ஷிப், பழுதுசரி செய்தல் நிலையங்கள் மற்றும் நிறுவனங்களின் தொழில் மாடல்களை செயல்படுத்தும் பயிற்சி பெறுவீர்கள்.
3. மின்சார வாகனத் துறையில் கிடைக்கும் அரசுத் திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் குறித்து வழிகாட்டல் பெறுவீர்கள்.
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி.
— TN DIPR (@TNDIPRNEWS) July 18, 2025
Three Day Electrical Vehicle Technology (EV) Training Programme.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/LXqkzd9kOp
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர்கள் www.editn.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், விவரங்ளுக்கு அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி/ கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
95437 73337/ 93602 21280. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















