மேலும் அறிய

ஜிஎஸ்டி மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு எதிரொலி - கும்பகோணத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

’’மணப்பெண் பட்டு சேலை உடுத்தி வந்தால் தான் பெருமை எனும் வழக்கம் இன்றளவும் உள்ளது; ஆனால் கைத்தறி பட்டு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை கந்தல் துணியாகி உள்ளது’’

கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் சுமார் ரூபாய் 2 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கும்பகோணம் கைத்தறி பட்டு ஜவுளி தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு கைத்தறி பட்டு ஜவுளி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் பிரேம்குமார் பொருளாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஜிஎஸ்டி மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு எதிரொலி - கும்பகோணத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

கூட்டத்தில்,  கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களான கோறா, பாவு, ஜரிகை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. எனவே இனி தயாரிக்கப்படும் புடவைகளுக்கு முந்தி புட்டா ரகங்களுக்கு ரூபாய் 600 ரூபாயும் மற்ற ரகங்களுக்கு ஏற்றார்போல் ரூபாய் 1000 வரையிலும்  விலையை உயர்த்தி வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த உள்ளோம்.  ஜவுளி உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கும்பகோணம் பகுதியில் பட்டு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் தொழிலாளர்கள் 27ஆம் தேதி முதல் வருகிற ஜனவரி 2ஆம் தேதி வரை கைத்தறி பட்டு உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.கூட்டத்தில் துணைத் தலைவர்கள் கணபதி, ஆனந்தன், துணை செயலாளர்கள் செல்வராஜன், பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பட்டு ஜவுளி உற்பத்தி தொழிலாளர்கள் அறிவித்துள்ள இந்த உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


ஜிஎஸ்டி மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு எதிரொலி - கும்பகோணத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

இது குறித்து கைத்தறி பட்டு ஜவுளி தொழிலாளர்கள் கூறுகையில், பட்டு நெசவுத்தொழில் குடிசைத்தொழிலாக தான் உள்ளது. அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால், ஏழை நெசவுத்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெரும்பாலான நெசவுத்தொழிலாளர்கள், நெசவுத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள். தற்போது நெசவுத்தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.   கும்பகோணம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருந்த நிலையில், தற்போது நெசவுத்தொழில் முடக்கம் காரணமாக 50 சதவீதம் நெசவாளர்கள் தான் உள்ளார்கள்.


ஜிஎஸ்டி மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு எதிரொலி - கும்பகோணத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

இதே நிலை நீடித்தால், சொற்ப அளவில் மட்டுமே நெசவாளர்கள் இருப்பார்கள்.  தற்போது, கச்சா பட்டின் விலை வரலாறு காணாத வகையில் உயந்துள்ளதால், பட்டு சேலை விலை அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வாங்குவது குறைந்து விட்டது. இதனால் சேலைகள் மற்றும் பட்டுத்துணிகள் அதிகளவில் தேக்கம் அடைந்து விட்டது.  கச்சா பட்டுவை, பெருமுதலாளிகள் பதுக்குவதை தடுத்தால் தான் பட்டு நெசவுத்தொழில் முன்னேற்றம் அடையும். இதில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கும்பகோணத்திலுள்ள நெசவாளர்களின் நிலை கேள்வி குறியாகும். மணப்பெண் பட்டு சேலை உடுத்தி வந்தால் தான் பெருமை எனும் வழக்கம் இன்றளவும் உள்ளது; ஆனால் கைத்தறி பட்டு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை கந்தல் துணியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget