நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனை செவிலியரை மிரட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பதோஹியில் உள்ள அரசு மருத்துவமனை செவிலியரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், பணம் பறிப்பதற்காக அவரது ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
செவிலியரின் தந்தையின் புகாரின் அடிப்படையில், சூரஜ் குமார் கௌதம் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான தீரஜ் மௌரியா மற்றும் வினோத் மௌரியா மீது ஞாயிற்றுக்கிழமை சூரியவா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை ஆய்வாளர் அஜித் குமார் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ”அந்த செவிலியர் கடந்த காலத்தில் முக்கிய குற்றவாளியுடன் உறவில் இருந்துள்ளார். அந்த நாட்களில் அவர் அவரது படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளனர்.
இந்த விஷயம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததும், அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் வைத்த நிலையில் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றுள்ளார்.
சமீபத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் செவிலியரிடம் பணம் கேட்கத் தொடங்கியதாகவும், படங்கள் மற்றும் வீடியோக்களை ஆன்லைனில் பரப்புவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மார்ச் 19 அன்று, அவரும் அவரது கூட்டாளிகளும் டெலிகிராம் செயலியில் வீடியோக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

