TN Rain Alert: தமிழ்நாட்டிற்கு நாளை தீபாவளி இருக்கா? குறிவைத்து அடிக்கும் கனமழை - சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?
TN Rain Alert: தமிழ்நாட்டில் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
தீபாவளி கொண்டாடப்பட உள்ள நாளைய தினத்தில் மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் கணித்துள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இதனிடையே, சென்னையில் தற்போதைய நிலையில் கனமழை கொட்டி வருகிறது. அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாளை தீபாவளியை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாட மக்கள் காத்திருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியிருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 17 மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி கனமழை பொழியும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், நவம்பர் 2ம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் திருநெல்வேலி உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 5ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.