விழுப்புரத்தில் ஊராட்சி தலைவர் ஏலம் அமோகம்... ரூ.13 லட்சத்தை தொடர்ந்து மற்றொரு தலைவர் ரூ.14 லட்சம்!
விழுப்புரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி 14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தொடங்கி நடைபெற்று வருகிறது. 22ம் தேதி வரை வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட உள்ளது.
தேர்தலுக்கான பணியை தீவிரமாக செய்து வரும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்க புகார் எண்களை அறிவித்தது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது கிராமங்களில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டன. அது போன்று சம்பவங்களை தடுக்கும் வண்ணம் இந்த முறை கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
Jothimani Speech: கலவரக்காரர்களுக்கு நடுங்குகிறது - காரணம் கலகக்காரர் ஜோதிமணி மாஸ் பேச்சு !
இந்த நிலையில், விழுப்புரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி 14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு... விழுப்புரம் மாவட்டம், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது. இதில், தலைவர் பதவிக்கு போட்டி இடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ? அவரையே பொது மக்கள் ஓட்டுப் போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம், அக்கிராம மாரியம்மன் கோயில் எதிரிலுள்ள ஆலமரத்தடியில் நடைபெற்றது. இதில் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் வந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் 5 லட்சம் ரூபாயில் இருந்து ஏலத்தை தொடங்கினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தவர்களில் அதிக அளவில் யார் பணம் தருவது என்று போட்டிப் போட்டு அறிவித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் ஒரு மணி வரை ஏலம் நடைபெற்றது.
இதன் நிறைவாக, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடிய சற்குணம் என்பவருக்கு ரூ.14 லட்சத்திற்கு ஏலம் முடிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று அக்கிராம இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படியில் தற்போது இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏலம் நடைபெற்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SA Chandrasekhar Speech: எனக்கும் விஜய்க்கும் சண்டதான்..உண்மையைச் சொன்ன எஸ்.ஏ.சி