மேலும் அறிய

விழுப்புரத்தில் முதன் முதலாக மாபெரும் புத்தகத் திருவிழா - விழா விவரம் இதோ

சிறப்பு அழைப்பாளர்களாக முதல் நாளன்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களும், எழுத்தாளர் திரு.கண்மனி குணசேகரன் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில், முதன் முதலாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

புத்தகத் திருவிழா வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்தற்காக மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் முதல் புத்தகத் திருவிழா, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் 25.03.2023 அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், புத்தகத்திருவிழாவினை தொடங்கி வைத்து 05.04.2023 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது.

புத்தகத்திருவிழாவில் 100 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இவ்வரங்குகளில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, உள்ளூர் எழுத்தாளர்களுக்கான புத்தக அரங்கு ஒதுக்கப்பட்டு புத்தகங்கள் கண்காட்சிப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தகத்திருவிழாவினை காண்பதற்கு நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்கக்படுகிறது. பொதுமக்கள் புத்தக அரங்குகளை பார்ப்பது மட்டுமல்லாமல், நாள்தோறும் காலை மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி

மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்திடும் வகையில் பெருந்திரள் வாசிப்பும், மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, உட்பட பல்வேறு போட்டிகளும், மதியத்திற்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும், பின்னர் சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு சொற்பொழிவு, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களாக முதல் நாளன்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களும், எழுத்தாளர் திரு.கண்மனி குணசேகரன் அவர்களும், இரண்டாம் நாளன்று மக்கள் சிந்தனை பேரவை தலைவர் திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களும், நகைச்சுவை நாவலர் திரு.மோகனசுந்தரம் அவர்களும், மூன்றாம் நாளன்று பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களும், நுண்கலைப் பயிற்றுநர் முனைவர் ப.தாமோதரன் அவர்களும், நான்காம் நாளன்று டாக்டர் பெரு.மதியழகன் அவர்களும், பேராசிரியர் த.ராஜாராம் அவர்களும், ஐந்தாம் நாளன்று பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களும், விஜய் டி.வி புகழ் ஈரோடு திரு.மகேஷ் அவர்களும், ஆறாம் நாளன்று விஜய் டி.வி புகழ் திரு.கோபிநாத் அவர்களும், புலவர் இரெ.சண்முக வடிவேல் அவர்களும்,

ஏழாம் நாளன்று சொல்வேந்தர் திரு.சுகி சிவம் அவர்களும், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களும், எட்டாம் நாளன்று கவிஞர் தேவேந்திர பூபதி அவர்களும், கவிஞர் அறிவுமதி அவர்களும், பத்ம ஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களும், ஒன்பதாம் நாளன்று நகைச்சுவை தென்றல் கலைமாமணி மற்றும் தலைவர், தமிழ்நாடு பாடநூல் கழகம் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களும், பத்தாம் நாளன்று பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களும், பதினொன்றாம் நாளன்று பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும், திரைப்பட நடிகர் ஜோ.மல்லூரி அவர்களும், பன்னிரண்டாம் நாளன்று மக்கள் நாவலர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் ஆகியோர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், பாரம்பரிய உணவுத்திருவிழாவும், மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப்பொருட்கள் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது. மேலும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியினை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவினை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில், சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் வருகை புரிந்து புத்தகத்திருவிழாவினை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி  தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
யாருப்பா இவரு... அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நபர்.. அப்படி என்ன செய்தார்?
யாருப்பா இவரு... அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நபர்.. அப்படி என்ன செய்தார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMKதலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளைTVK Vijay Next Plan | OPERATION வட மாவட்டம்! தவெகவின் அடுத்த மாநாடு! விஜய்யின் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
யாருப்பா இவரு... அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நபர்.. அப்படி என்ன செய்தார்?
யாருப்பா இவரு... அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நபர்.. அப்படி என்ன செய்தார்?
மாத ஊதியம் ரூ. 26,000 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் - அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
மாத ஊதியம் ரூ. 26,000 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் - அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
SS Sivasankar: சென்னை டூ உளுந்தூர்பேட்டை! அரசு விரைவுப் பேருந்தில் திடீர் விசிட்.. கேபினில் அமர்ந்து  அமைச்சர் சிவசங்கர் பயணம்
SS Sivasankar: சென்னை டூ உளுந்தூர்பேட்டை! அரசு விரைவுப் பேருந்தில் திடீர் விசிட்.. கேபினில் அமர்ந்து அமைச்சர் சிவசங்கர் பயணம்
Mumbai Weather: வான்கடேவில் விளையாடப் போகும் மழை.. மும்பை - டெல்லி மேட்ச்க்கு கோவிந்தாவா? வெதர் ரிப்போர்ட்
Mumbai Weather: வான்கடேவில் விளையாடப் போகும் மழை.. மும்பை - டெல்லி மேட்ச்க்கு கோவிந்தாவா? வெதர் ரிப்போர்ட்
TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
Embed widget