TN Medical Camp: இருமல், காய்ச்சல் இருக்கா? தமிழ்நாட்டில் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் - உடனே செக் பண்ணுங்க
TN Medical Camp: தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில் அரசு சார்பில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
TN Medical Camp: வடகிழக்கு பருவமழையை ஒட்டி நோய்தொற்று பரவலை தடுக்க, அரசு சார்பில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அமைச்சர் ஆலோசனை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடப்போம் நலம் பெறுவோம் மற்றும் பொது சுகாதார திட்டங்கள் குறித்து 45 துணை இயக்குனர்கள், நகர நல அலுவலர்களோடு ஆய்வு கூட்டம் சென்னை டி எம் எஸ் வளாகத்தில் நடைபெற்றது.
1000 இடங்களில் மருத்துவ முகாம்கள்:
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”வடகிழக்கு பருவ மழையையொட்டி நாளை (அக்.29) தொடங்கி நவம்பர் 5,1219,26 ஆகிய நான்கு வாரங்களிலும், டிசம்பர் 5, 17,31 உள்ளிட்ட ஐந்து வாரங்கள் மொத்தம் 10 வாரங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரம் இடங்களில் என மொத்தம் பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை உதவிகள் இந்த முகாம்களில் வழங்கப்படும்.
”நடப்போம் நலம் பெறுவோம்” திட்டம்:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டம் தொடர்பான புகார்கள் அந்தந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் தெரிவிக்கலாம். மேலும் நல்நாட்கள் நிதி உதவி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 4 முதல் 5 மாத கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ.1,000, 2-வது தவணையாக 5 முதல் 6வது மாதத்தில் ரூ.1,000, மூன்றாம் தவணையாக 9 மாதத்தில் ரூ.1,000 தரப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகும் மொத்தம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.5,000 வழங்கப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வருகின்ற நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் செயல்படுத்த உள்ள, நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, மக்களை தேடி மருத்துவம் இதயம் காப்போம், உள்ளிட்ட ஐந்து முக்கியமான திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளன. அதோடு, மற்றொரு முக்கிய திட்டமாக நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் இருக்கும்” என கூறினார்.
இன்று மருத்துவ முகாம்:
அமைச்சர் கூறியதன்படி, முதல் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற உள்ளது. மொத்தம் 1000 இடங்களில் நடைபெறும் இந்த முகாமில் மலேரியா, டெங்கு, இருமல், வழக்கமான காய்ச்சல் மற்றும் மழைக்காலங்களில் பரவக்கூடிய தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகின்றன. உடல்நலனை பரிசோதித்த பிறகு தேவைப்படின், மருத்துவமனைக்குச் செல்வது, உயர் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்பான அறிவுரைகளும் சிறப்பு மருத்துவ முகாமில் வழங்கப்படும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், மழைக்காலத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது நோய் பரவலை தடுக்க உதவும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )