37 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு! ராதாகிருஷ்ணனும் மாற்றம்!
கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக இராதாகிருஷ்ணன் பணியிட மாற்றம்.
37 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்தது தமிழக அரசு. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளராக டாக்டர். பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணியிட மாற்றத்தின் முழு விவரம்:
கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த முகமது நசீமுதீன், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராக மாற்றம்! ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக தாரேஷ் அகமது நியமனம்.
போக்குவரத்துத்துறை ஆணையராக எல்.நிர்மல்குமாரும், வணிகவரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்! மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியின் ஆட்சியராக பிரதீப் குமார் நியமனம்.
தென்காசி ஆட்சியராக ஆகாஷ் நியமனம்.
கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக சிவராசு நியமனம்.
உள்துறை முதன்மை செயலாளராக பணீந்திர ரெட்டி நியமனம்.
நெடுஞ்சாலை
வணிகவரித் துறை முதன்மை ஆணையர்/ முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் நியமனம்.
வருவாய் துறை நிர்வாக ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாட்ட ஆட்சியராக சாந்தி நியமனம்.
ராமநாதாபுரம் மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்.
தொழிதுறை கூடுதல் செயலாளராக மரியம் பல்லவில் பல்தேவ் நியமனம்.
வருவாய் பேரிடர் மேலாண்மை இணை ஆணையாராக ஜான் லூயிஸ் நியமனம்.
மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக விவேகானந்தன் நியமனம்
உணவு பாதுகாப்பு ஆணையாராக லால்வேனா நியமனம்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையின் ஆணையராக மதிவாணன் நியமனம்.
சென்னை ஆட்சியராக இருந்த விஜய ராணி சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக நியமனம்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்.
மாற்றுத்திறனாளிகள் நலதுறை ஆணியராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்