ஊடக ஒளிப்பதிவாளர் மரணம் - குடும்பத்திற்கு உதவிட முதலமைச்சருக்கு வேண்டுகோள்
மறைந்த ஊடக ஒளிப்பதிவாளர் ஜி.குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் கருணையுடன் நிதியுதவி செய்திட வேண்டும் என்று வேண்டுகிறோம்.
![ஊடக ஒளிப்பதிவாளர் மரணம் - குடும்பத்திற்கு உதவிட முதலமைச்சருக்கு வேண்டுகோள் Sun News Media cinematographer G. Kumar dies of heart attack Chennai Press Club condolences ஊடக ஒளிப்பதிவாளர் மரணம் - குடும்பத்திற்கு உதவிட முதலமைச்சருக்கு வேண்டுகோள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/04/afc20fcca5a778bc383e1062bda21ad4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தலைநகர் டெல்லியில் சன் செய்திகள் ஊடக ஒளிப்பதிவாளர் ஜி.குமார் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய சென்னை பத்திரிகையாளர் மன்றம் , குமாரின் குடும்பத்திற்கு கருணையுடன் உதவிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கையில்,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா புது ரெட்டியூர் கிராமத்தை பூர்விகமாக கொண்ட ஜி.குமார் (வயது 42 ) தலைநகர் டெல்லியில் கடந்த 15 ஆண்டுகாலமாக சன் குழுமத்தில் ஊடக ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை 04-04-2022 திங்கட்கிழமை மாரடைப்பால் காலமானார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் 42 வயதில் ஜி.குமார் அவர்களின் மரண செய்தி பெரும் துயரத்தைத் தருகிறது. ஜி.குமாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.
பொருளாதார நெருக்கடி மிகுந்த குடும்பத்தில் ஜி.குமாரின் வருவாயை நம்பியே அவரது மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையும் எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும் இருந்த நிலையில் இன்றைக்கு அவரது குடும்பம் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் , மறைந்த ஊடக ஒளிப்பதிவாளர் ஜி.குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் கருணையுடன் நிதியுதவி செய்திட வேண்டும் என்று வேண்டுகிறோம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)