மேலும் அறிய

சாத்தனூர் அணையில் இருந்து 1710 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1190 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 117 அடி எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது.

சாத்தனூர்  அணையில் இருந்து 1710 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், சாத்தனூர் அனைக்கு வினாடிகு 1190 கன அடி வீதம் வந்து வந்து கொண்டிருக்கிறது. என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் தொடர்ந்து அனைக்கு நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது தண்ணீர் அணையில் 117 அடியை எட்டியது. அதாவது அணையில் 6875 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றி வந்தனர். லேசான நீர்வரத்து இருந்து வந்த நிலையில் தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் மீண்டும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .

சாத்தனூர்  அணையில் இருந்து 1710 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வினாடிக்கு 1910 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சாத்தனூர் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் அணைக்கு வரும் நீரில் இருந்து 1710 கன அடி நீரை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் இரு கறைகளும் அனைத்தப்படி ஆர்ப்பரித்து செல்கிறது, இதில் தரைப்பாலம் அனைத்தும் மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் காவல்துறையினர் தரைப்பாலம் முன்பு பேரிகாடுகள் அமைத்து பொதுமக்கள் செல்லவேண்டாம் என கூறி வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அதற்கு ஏற்றவாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 1710 கனடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது வெள்ளம் அதிகரித்துச் செல்லும் நிலையில் பாலங்களை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம் எனவும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடவும் கரையோரம் உள்ள கிராம பொது மக்களுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்களை செல்ல அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது மேலும் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் கண்காணிக்கவும் தெரிவிக்கப்படுகிறது .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget