மேலும் அறிய

Petrol Diesel Price: பெட்ரோல் விலையில் மாற்றமா? 229வது நாள் விலை நிலவரம் என்ன?

கச்சா எண்ணேய் விலையில் மாற்றங்கள் ஏற்படும் நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இன்றைய விலை

இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 229ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று (ஜனவரி.05) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.  

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Embed widget