Education tour: வாவ்.. அமைச்சர் அன்பில் மகேஸுடன், 68 அரசுப்பள்ளி மாணவர்கள் துபாய் பறக்கப்போறாங்க.. காரணம் இதோ..
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 68 அரசுப்பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக துபாய் செல்கின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 68 அரசுப்பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக துபாய் செல்கின்றனர். இவர்களுடன் 5 ஆசிரியர்களும் உடன் செல்கின்றனர். இணைய வழியில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் துபாய் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Essa AL Ghurair Investment LLC, Dubai, UAE என்ற நிறுவனம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறது., தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் 68 மாணாக்கர்கள் மற்றும் அவர்களுடன் செல்ல சில ஆசிரியர்களை ஐக்கிய அரசு அமீரக நாட்டிலுள்ள துபாய் நகரத்திற்கு இலவசமாக கல்விச் சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கும் அழைத்துச் செல்ல உள்ளது.
மேற்படி நபர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ஏதுவாக, சென்னையிலிருந்து துபாய் சென்று வர தேவையான விமான கட்டணம், கடவுச்சீட்டு மற்றும் நுழைவு அனுமதி சீட்டு பெறுவதற்கான கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவுகள் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்கள் மற்றும் ஏற்பாடுகளை மேற்கண்ட நிறுவனமே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட நிலையில், மாணவர்களை தெரிவு செய்யும் விதமாக 18.09.2021 முதல் 08.11.2021 வரை இணைய வழியில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய தற்போது பதினொன்றாம் வகுப்பு பயிலும் 68 மாணாக்கர்கள் மற்றும் மாணாக்கர்களின் பாதுகாப்பிற்காக, இப்போட்டியில் பங்களிப்புடன் சிறப்பாக செயல்பட்ட 5 ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 3 அலுவலர்கள் என மொத்தம் 76 நபர்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தலைமையில் துபாய் நகரத்திற்கு 4 நாட்கள் (10.1.2022 முதல் 13.11.2022 முடிய) கல்விச் சுற்றுலாவிற்கும் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கும் அழைத்துச் செல்ல அனுப்பி வைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 68 பள்ளி மாணாக்கர்கள், 5 ஆசிரியர்கள் மற்றும் 3 அலுவலர்கள் என மொத்தம் 76 நபர்களை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தலைமையில் துபாய் நகரத்திற்கு கல்விச் சுற்றுலாவிற்கும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கும் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
18.09.2021 முதல் 08.11.2021 வரை இணைய வழியில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய, தற்போது பதினொன்றாம் வகுப்பு பயிலும் 68 பள்ளி மாணாக்கர்கள், மாணாக்கர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆசிரியர்கள் மற்றும் 3 அலுவர்கலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில், துபாய் நகரத்திற்கு 10.11.2022 முதல் 13.11.2022 முடிய 4 நாட்கள் கல்விச் சுற்றுலாவிற்கும், ஷார்ஜாவில் நடைபெறும்
பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கும் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.