மேலும் அறிய

Isha Agri : கருப்பு கவுனி மிக்ஸ் குறித்து சத்குரு.. ஈஷா அக்ரி விழாவில்,நெகிழ்ந்த தான்யாஸ் நிறுவனர் தினேஷ் மணி

”தமிழகத்தில் இருந்து ஒரு விவசாயி கருப்பு கவுனியில் ஹெல்த் மிக்ஸ் செய்திருக்கிறார் என்று அதை கைகளில் ஏந்தி, பலமுறை பேசினார். அதை விட மிகப்பெரிய ஆசிர்வாதம் வேறு என்ன இருக்க முடியும்" என்று பேசினார் 

நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் தமிழ் விவசாயியின் கருப்பு கவுனி மிக்ஸ் குறித்து சத்குரு பேசினார்..

ஈஷா அக்ரி விழாவில் தான்யாஸ் நிறுவனர் தினேஷ் மணி நெகிழ்ச்சி

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு கோவையில் இன்று (ஆக 15) நடைபெற்றது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இவ்விழாவில் சத்குரு அவர்கள் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலில் தமிழ் விவசாயியின் கருப்பு கவுனி மிக்ஸ் குறித்து பேசியதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும் இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து மண் காப்போம் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் பேசுகையில்  "இன்றைய சூழலில் விவசாயிகள் ஒரு சுய தொழில் துவங்கி தொழிலதிபராக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பு விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் இளைஞர்கள், பெண்கள் இல்லத்தரசிகள் என அனைவரையும் சென்று சேர வேண்டும் எனும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது." என்று பேசினார்.

Isha Agri : கருப்பு கவுனி மிக்ஸ் குறித்து சத்குரு.. ஈஷா அக்ரி விழாவில்,நெகிழ்ந்த தான்யாஸ் நிறுவனர் தினேஷ் மணி

இதில் கலந்து கொண்ட சிறுதானிய மதிப்புகூட்டு தொழிலில் சாதித்து வரும் தினேஷ் மணி அவர்கள் பேசுகையில், "நம் தயாரிப்புகளை தயக்கம் இல்லாமல் நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நான் எந்த விழாவிற்கு சென்றாலும் என் தயாரிப்புகளையே அன்பளிப்பாக கொடுத்து வருகிறேன். அப்படி ஒரு முறை நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலுக்காக சத்குருவுடன் விவசாயிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மற்ற விவசாய நண்பர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.

வெளிநாட்டு சேனல் என்பதால் அதில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே கருப்பு கவுனி மிக்ஸை சத்குருவிடம் கொடுத்தேன். அவர் தமிழகத்தில் இருந்து ஒரு விவசாயி கருப்பு கவுனியில் ஹெல்த் மிக்ஸ் செய்து இருக்கிறார் என்று அதை கைகளில் ஏந்தி பலமுறை பேசினார். அதை விட மிகப் பெரிய ஆசிர்வாதம் வேறு என்ன இருக்க முடியும்" என்றுப் பேசினார் 

மேலும் அவர் வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டல் மற்றும் அதனை பராமரிப்பது, கடன் இல்லாமல் தொழில் செய்வது போன்ற பங்கேற்பாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்தார். 

இன்றைய சூழலில் வேளாண் சார் தொழில்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் தமிழ்நாடு வேளாண் கல்லூரி வணிக மேம்பாடு துறை தலைமை செயல் அலுவலர் திரு.ஏ.வி. ஞானசம்பந்தம் அவர்கள் விரிவாக விளக்கிப் பேசினார். மேலும் கோவை நபார்டு வங்கி அதிகாரி திருமலா ராவ் அவர்கள் விவசாயிகள் தொழில் துவங்க நபார்டு  வங்கியின் மூலம் வழங்கப்படும் கடனுதவி திட்டங்கள் குறித்து விளக்கினார்.

Isha Agri : கருப்பு கவுனி மிக்ஸ் குறித்து சத்குரு.. ஈஷா அக்ரி விழாவில்,நெகிழ்ந்த தான்யாஸ் நிறுவனர் தினேஷ் மணி

சிறுதானியத்தின் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டும் பி.வி.ஆர் புட்ஸ் நிறுவனர் திருமதி சுபத்ரா அவர்கள் பேசுகையில் “உலகத்தில் அதிகளவில் பால் உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால் அதில் இருந்து தயாரிக்கும் வே புரோட்டீன் எனும் பொருளை நாம் இறக்குமதி செய்கிறோம். ஏன் அந்தப் பொருளை நாமே உற்பத்தி செய்யக்கூடாது. தொழில் துவங்க நினைப்பவர்கள் உங்களுக்கான துறையை முதலில் தேர்ந்தெடுங்கள், பின் அதற்கான தகவல் மையங்களுக்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்

அடுத்ததாக முருங்கை மதிப்புகூட்டு பொருட்களின் ஆன்லைன் விற்பனையில் சாதித்து வரும் பெண் விவசாயி திருமதி. பொன்னரசி, ஜீரோவில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்டும் தாய் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. அர்ச்சனா, ஐடித் துறையிலிருந்து கால்நடை தீவனப் பொருட்கள் தயாரிப்பு மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் ஆர்.பி. கேட்டல் பீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. அன்னபூரணி, உள்ளிட்ட வேளாண் சார் தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு சாதனையாளர்கள், வேளாண் வல்லுனர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

இதுமட்டுமின்றி இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பாக செயல்படும்  பத்து தொழில் முனைவோர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மண் காப்போம் விருதுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் வேளாண் சார் தொழிலில் பயன்படும் எளிமையான சிறு கருவிகள், பேக்கிங்கில் பயன்படும் சாதனங்கள் உள்ளிட்டவற்றின் கண்காட்சியும் நடைபெற்றது. மேலும் வேளாண் மதிப்புகூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைபெற்றது.  

ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த இயற்கை விவசாயம் குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வியக்கம் மூலம் இதுவரை 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 8,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
ISRO Sivan:
"2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
"அம்பேத்கரை அவமானப்படுத்திட்டாங்க.. இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்" அமித் ஷா அதிரடி
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
Embed widget