Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய குருநாதராக நடிகர் மதன்பாப்பையே குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

தமிழ்சினிமாவின் நகைச்சுவை நடிகராக உலா வந்தவர் மதன்பாப். இவர் கடந்த ஓராண்டு காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை காலமானார். மதன்பாப் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே தமிழ்நாடு மக்கள் மத்தியில் அறிந்துள்ளனர்.
பன்முக கலைஞர்:
ஆனால், அவர் மிமிக்ரி கலைஞர், குத்துச்சண்டை வீரர், வாள் வீரர், இசையமைப்பாளர் என பல திறன் கொண்டவர். இதை அனைத்தையும் கடந்து ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவரிடம்தான் உதவியாளராக பணியாற்றினார். இதுதொடர்பாக, ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது,
ஏ.ஆர்.ரஹ்மான் என் சிஷ்யன் இல்லை:
ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு பணியாற்றும்போதே அவர் பெரிய புத்திசாலி. அதில் எந்த மாற்றுக்கருத்துமே இல்லை. நான் நினைச்சதற்கு மேலே அவர் கொடுத்திருக்கார். என்னுடைய ஐடியாவே நேராக இருக்காது. உல்டாவாகத்தான் இருக்கும். அதற்கு பண்ணி கொடுக்க ஒருத்தர் வேண்டும் என்றபோது அவரிடம் சென்றேன்.

அவருக்கு கற்றுக் கொடுக்கனும்னு என்று நான் செல்லவில்லை. ஒரு புத்திசாலியான ப்ளேயர் என்னிடம் வேண்டும் என்ற சுயநலத்தில்தான் நான் அவரிடம் சென்றேன். ஏனென்றால், என் வேலை சீக்கிரம் முடியும். அப்போ, நான் சொன்னதில் அவர் ஏதோ தெரிந்து கொண்டுள்ளார். அதனால், அவர் என்னை குரு என்று சொல்கிறார். நான் அவரை சிஷ்யன் என்று சொன்னதே இல்லை. என்னுடைய சிந்தனை அவருக்கு பிடித்திருக்கலாம்.
ரஹ்மான் சொன்னது ஏன்?
அதுவும் அவர் சொன்னதாக கே.எஸ்.ரவிக்குமார், கமல்ஹாசன் சொன்னார்கள். அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் என்னிடம் நிறைய வாசித்துள்ளார். முயற்சிதானே வாழ்க்கை. வெஸ்டர்ன் வரும்போது ராகா போடுவேன். அவருக்கு அது எல்லாம் புதியதாக இருந்திருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தெனாலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இதை ஏ.ஆர்.ரஹ்மானே கூறியுள்ளார். பன்முக வித்தகனான மதன்பாப் 1984ம் ஆண்டு முதன்முதலாக நீங்கள் கேட்டவை என்ற படத்தில் நடித்தார். பின்னர் தொடர்ந்து அவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.
தன்னுடைய சிரப்பால் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமாக இடம்பிடித்த மதன்பாப் இதுவரை 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் எமன் கட்டளை படத்தில் அவர் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு படத்திலும் அவர் நடித்துள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாலை காலமானார். இளையராஜாவிடம் மதன்பாப் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். மேலும், மதன்பாப் ஏராளமான விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார்.





















