மேலும் அறிய

சிதம்பரம் கோவில் கணக்குகளை காட்டுங்கள்.. தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் விட்ட அறநிலையத்துறை..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் இருந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய உள்ளதாக தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் இருந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது தீட்சிதர்கள் தரப்பில் நீதிமன்றத்தை அணுகுவதும், தொடர்ந்து கதையாக இருந்து வரும் சூழலில்,  கடந்த 2014 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கலாம் என  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அளித்திருந்தது.  அதன்படி சுமார் 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தீட்சிதர்களே அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர். 

இந்த சூழலில் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வரவு செலவுகள் குறித்த ஆவணங்களை தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டபூர்வமாக கோயிலில் அனைத்தும் செயல்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறநிலையத்துறை வெளியிட்ட நோட்டீஸ் : 

சிதம்பரம் கோவில் கணக்குகளை காட்டுங்கள்.. தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் விட்ட அறநிலையத்துறை..

இந்து சமய அறநிலை துறை மூலம் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட ஆய்வு  குழுவின் ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட சரிபார்ப்பு அலுவலரும், துணை ஆணையருமான சி.ஜோதி நடராஜர் கோயில் செயலாளரருக்கு  அனுப்பி உள்ள நோட்டீஸில்  2014 முதல் நாளது தேதி வரையிலான வரவு செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், கோவிலில் நடைபெற்ற திருப்பணி குறித்த விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத் துறை அனுமதி விவரம் மதிப்பீடு விவரங்கள், கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய் இனங்கள், மேற்கண்ட சொத்துக்களின் தற்போதைய நிலை இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்து பதிவேடு, பதிவேடு திட்ட பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள் கோயிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலை உயர்ந்தவைகளின் மதிப்பீட்டு அறிக்கை, கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விபரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும் பொழுது வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

அறநிலையத்துறையின் இந்த நோட்டீஸை, சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோயில் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம் நடராஜர் கோயிலில், தீட்சிதர்களின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில், கனகசபை எனப்படும் பொன்னம்பலத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதற்கு தீட்சிதர்கள் தரப்பு குடியரசுத்தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அதுகுறித்த அடுத்த அறிவிப்பும் நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், தற்போது கோயில் நிர்வாகம் குறித்து சட்டரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget