DMK Youth Wing Conference:ஆளுநர் பதவி நீக்கம் உள்பட இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்.. கொண்டு வந்தார் அமைச்சர் உதயநிதி!
சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்தார்.
![DMK Youth Wing Conference:ஆளுநர் பதவி நீக்கம் உள்பட இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்.. கொண்டு வந்தார் அமைச்சர் உதயநிதி! DMK Youth Wing Conference 2024 Salem DMK Youth Conference, Youth Secretary Udayanidhi Stalin brought 25 resolutions DMK Youth Wing Conference:ஆளுநர் பதவி நீக்கம் உள்பட இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்.. கொண்டு வந்தார் அமைச்சர் உதயநிதி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/46650a2c4bc1bb3ecbb67239522a55f91705814823841571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு, இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதனையொட்டி, மாநாட்டின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். இதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக பின்பற்ற வேண்டும், மத்திய பொதுப்பட்டியலில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தினை வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரே செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு..
தீர்மானம் - 1
இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்த ஜனநாயக பாதுகாவலர் தமிழக முதல்வருக்கு நன்றி.
தீர்மானம் - 2
தமிழகம் தொடர்ந்து முதன்மை மாநிலமாக நீடிக்க அயராது பாடுபடும் தமிழக முதல்வருக்கு இளைஞரணி என்றும் துணை நிற்கும்
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெற இளைஞரணி பாடுபடும். நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் 2 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி. கலைஞர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டஙக்ளை பாராட்டி தீர்மானம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி ரூ. 6. 69 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததற்காக நன்றி தெரிவித்து தீர்மானம்.
உள்ளிட்ட முதல் 12 தீர்மானங்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்.
தீர்மானம் -13
நீட் தேரவை ஒழிக்கும் வரை போராடுவோம்.
நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றி அடையும் வரை இளைஞரணி போராடும்.
தீர்மானம் - 14
குலக்கல்வி முறையை ஒழிக்க இளைஞரணி பாடுபடும்.
தீர்மானம் - 15
கல்வி, மருத்துவம், மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் .
தீர்மானம் -16
முதலமைச்சரே பல்கலைகழக வேந்தர். சட்ட முவடிவை விரைவில் நடைமுறை படுத்த வேண்டும்.
தீர்மானம் - 17
ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிட வேண்டும்.
தீர்மானம் - 18
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும்.
தீர்மானம் - 19
ஜம்மு காஷ்மீர்க்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
தீர்மானம் - 20
மாநில சுயாட்சி அடிப்படையில் உட்சபட்ச அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
தீர்மானம் - 21
அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைபாவையாக்கிய ஒன்றிய அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் - 22
நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்
தீர்மானம் - 23
இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக என்பதை அம்பலபடுத்துதல்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி இரட்டை வேடம் போடுகிறது.
தீர்மானம் - 24
பாஜக ஆட்சியை ஒழிக்க இளைஞரணி முன்கள பணியாளர்களாக செயல்படும்.
தீர்மானம் - 25
ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகியிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஓய மாட்டோம்.
மேலும், ஆளுநர் பதவி என்பது நிரந்தரமாக நீக்க வேண்டும், மாநில சுயாட்சி அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும், அமலாக்கத்துறையின் மூலம் எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் பாஜக அரசினை கண்டிப்பது, நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் போக்கை கண்டிப்பது, நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களிடயே மீண்டும் வாக்கு பெறுவதற்காக மதவாத அரசியல் மேற்கொள்ளும் பாஜக-வை கண்டிப்பது, மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்த முன்கள போராளிகளாக இளைஞர் அணியினர் செயல்படுவது, நாடாளுமன்றத் தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பாக சூளுரைப்பது உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)