மேலும் அறிய
Advertisement
Aavin: பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிக்கிறது- அறிக்கையில் உணவு பாதுகாப்புத் துறை சொல்வது என்ன?
ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது
ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதி அனுமதிக்கிறது என உணவுப் பாதுகாப்பு துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கில், உணவுப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விபரம்:
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை நெழிகியில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நெகிழி தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க விதிகள் அனுமதிப்பதால், ஆவின் நிறுவனம் நெகிழி கவர்களை பயன்படுத்துகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் எனவும் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
Grab a New Bite... pic.twitter.com/rO9SRlJG4j
— Aavin TN (@AavinTN) August 19, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion