மேலும் அறிய

Indian Condemned by Americans: ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?

அமெரிக்காவில் வசித்துக்கொண்டு, வேண்டாத ஒரு விஷயத்தை பேசிய இந்தியர் ஒருவரை, அமெரிக்க அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் வறுத்தெடுத்து வருகின்றனர்.

உலகிலேயே, மிகப்பெரிய சாதி அமைப்பை கொண்ட நாடு இந்தியா தான். அதனால், சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டு, ஏராளமான சாதிக் கட்சிகளும் இங்கே வலம் வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு சாதிப் பெருமை பேசிய ஒருவரை, அமெரிக்கர்கள் வசைபாடி வருகின்றனர்.

சாதிப் பெருமை பேசி பதிவு போட்ட குஜராத்தை சேர்ந்த இளைஞர்

அமெரிக்காவின் டால்லாஸில் வசிக்கும் இந்தியர் ஒருவரின் பதிவினால் தான் பிரச்னையே வெடித்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த தயாளன் படேல் என்பவர், டால்லாஸில், எங்கள் சாதி (லியுவா படிதார் சமாஜ்) சார்பாக வாலிபால் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் நம் சாதியினர் 40,000 பேரில், 8,000 பேர் இங்கு கூடியுள்ளோம். இங்கு வசிக்கும் நம் சாதியைச் சேர்ந்த 40,000 பேரும் குஜராத்தின் ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இங்கு ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம். பெரும்பாலானோர், அமெரிக்காவின் கிராமப்புறங்களில் மோட்டல் அல்லது கேஸ்(பெட்ரோல்) பம்ப் வைத்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், அதற்கு முந்தைய பதில், சாதி அமைப்புகளை பற்றி பேசி, அதை தனித்தனியாக பிரித்து வைத்திருப்பதைப் பற்றி மக்கள் பேசுவது வேடிக்கையாக இருந்தாலும், அது மிகவும் ஆழமானது என தயாளன் கூறியுள்ளார். அதைப் பற்றி தான் பெரிதாக கவலைப்படாவிட்டாலும், ஒரு பரந்த இறுக்கமாக பிணைக்கப்பட்ட சமுதாயத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்வது அற்புதமாக இருப்பதாக கூறியுள்ளார். 

தயாளனுக்கு கண்டனம் தெரிவித்துவரும் அமெரிக்கர்கள்

தயாளன் போட்டுள்ள இந்த பதிவிற்கு அமெரிக்கர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவருக்கு பதில் பதிவிட்டுள்ள பில்லர் என்பவர், என் சாதி என போட்டு தொடங்கப்பட்டிருக்கும் உங்கள் செய்தியை பார்த்து மிகவும் வருத்தமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது என சாடியுள்ளார். மேலும், இது பங்கரமானது, மோசமான விஷயங்கள் எப்படி அமெரிக்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டு, அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. தயாளன் போன்றோரிடமிருந்து இத்தகைய செயலை பார்ப்பதை நம்ப முடியவில்லை. நான் செல்லும் செய்தி அவருக்கு எட்டாது என்பதும் எனக்கு நிச்சயமாக தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல், இந்தியர் ஒருவரே கூட அவருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள பதில் பதிவில், நான் ஒரு இந்தியன், நமது சாதிய புத்தியை நாம் ஏன் இங்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுள்ளார். மன்னித்துவிடுங்கள், ஆனால், ஒரு நிகழ்வை குஜராத்தை சேர்ந்த படேல் இனத்திற்கு மட்டும்தான் எனக் கூறி ஏன் பெருமை கொள்கிறீர்கள், அப்படி செய்வதானால் இந்தியாவிலேயே இருங்கள் என்று சாடியுள்ளார். படேல், ஷா, சிங், குப்தா பேன்றவற்றை இந்தியாவிலேயே விட்டுவிட வேண்டும், அதை இங்கு கொண்டுவருவது தவறு என விமர்சித்துள்ளார்.


Indian Condemned by Americans: ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?

இதேபோல், தயாளனுக்கு அளித்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன்  கில், சாதி அமைப்பு இல்லாததனாலேயே, அமெரிக்கா வாய்ப்புகள் நிறைந்த ஒரு பூமியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு சாதி விசுவாசத்தை இறக்குமதி செய்தால், அமெரிக்காவின் செழுமையையும், சுதந்திரத்தையும் நாம் நிலைநிறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற ஒருங்கிணைப்பு இல்லாத குடியேற்றம், நமது தேசியம் மற்றும் கலாச்சாரத்தின் தற்கொலை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா நிறவெறிக்குதான் பிரபலம். ஆனால், அங்கு சாதிகள் கிடையாது. இந்நிலையில், அங்கு செல்லும் இந்தியர்கள் சிலர், அங்கு இல்லாத ஒன்றைப் பற்றி பேசி, குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தால், சட்டவிரோத குடியேற்றம் மட்டுமல்ல, இதுபோன்று பேசுபவர்களையும் அமெரிக்கா திருப்பி அனுப்பத்தான் செய்யும்.

இங்கேயே சாதி வேண்டாம் என்றுதான் நாம் சொல்லிக்கொடிருக்கிறோம். ஆனால், அமெரிக்காவிற்கு சாதியை ஏற்றுமதி செய்ய நினைக்கும் இவர்களை யார் திருத்துவது.?

 

 

தலைப்பு செய்திகள்

US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?
490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள், விலை - விற்பனை எப்போது?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Embed widget