Champions Trophy 2025 : இறுதிப்போட்டியில் இந்தியா! துபாயில் கால் பதிக்கும் இரண்டாவது அணி எது? NZ vs SA பலப்பரீட்சை
Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா vs ஆஸ்திரேலியா:
துபாயில் நடந்த முதலாவது அரையிறுதிப்போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் பேட்டிங் செய்தது. ஓப்பனர் கூப்பர் கோனோலி டக் அவுட்டாகி வெளியேற, டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினாலும் 39 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
அதன் பிறகு ஸ்மித் மற்றும் லபுஷேன் மூன்றாவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது, லபுஷேன் விக்கெட் இழந்ததை அடுத்து கேரியுடன் ஜோடி சேர்ந்து ஆடிய விதத்தை பார்த்த போது ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஷமி ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்த உடன் ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு அடங்கியது.
இதையும் படிங்க: IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
இந்திய அணி வெற்றி:
அதன் பிறகு இலக்கை துரத்திய இந்திய அணி விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 49வது வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி துபாயில் நடைப்பெறும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தியாவுடன் மோதப் போவது யார்?
சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? சம்பளம் எவ்வளவு?
லாகூர் பிட்ச் எப்படி?
இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில், ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், ஒரு போட்டியில் சேசிங் செய்த அணியும் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 316 ஆகவும், அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 352 ரன்களை சேஸ் செய்துள்ளது. இரு அணிகளும் பல பவர் ஹிட்டர்களால் நிரம்பியிருப்பதால், பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும். இந்த போட்டியில் ரசிகர்கள் அதிக ஸ்கோர் அடிக்கும் போட்டியை எதிர்பார்க்கலாம்.
நேரடி ஒளிபரப்பு விவரங்கள்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18-ல் போட்டியை இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணி முதல் ஒளிபரப்பாகும். ஜியோஸ்டார் பல மொழிகளில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.
தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து நேருக்கு நேர்
விளையாடிய போட்டிகள் – 73
தென்னாப்பிரிக்கா வெற்றி – 42
நியூசிலாந்து வெற்றி – 26
முடிவில்லை - 5
உத்தேச அணி:
நியூசிலாந்து : வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்.
தென்னாப்பிரிக்கா : டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.





















