மேலும் அறிய

மரக்கன்று நடணும்.. அந்தந்த பகுதி மாணவர்கள் பராமரிக்கணும் - தென்காசியில் சூப்பர் சுதந்திர தினம்

தொடர்ந்து சமாதான புறாவும்,  மூவர்ண பலூன்களையும் மாவட்ட ஆட்சியர்  பறக்கவிட்டார்.

தென்காசியில் தனியார் பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக, 75 அடி நீளத்தில் இந்திய வரைபடத்தை வரைந்தும்,  அதை மரக்கன்றுகள் கொண்டு அலங்கரித்தும் பசுமை விழாவாக கொண்டாடினர்.

நமது இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. அதே போல் தென்காசியிலும் சுதந்திர தின விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டது.  தென்காசியில் ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் பள்ளியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர் ராஜ் 9:05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் காவல் துறையினர் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சமாதான புறாவும்,  மூவர்ண பலூண்களையும் மாவட்ட ஆட்சியர்  பறக்கவிட்டார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர்க்கு  நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

இதே போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில், 75-வது சுதந்திர தின விழாவை பசுமை விழாவாக கொண்டாடினர். 75-வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் வகையில் 75 அடி நீளத்திற்கு இந்திய வரைபடத்தை வரைந்து அதனுள் 1500 மரக்கன்றுகளை வைத்து இந்திய வரைபடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மரக்கன்று நடணும்.. அந்தந்த பகுதி மாணவர்கள் பராமரிக்கணும் - தென்காசியில் சூப்பர் சுதந்திர தினம்

இங்கு வைக்கப்பட்டிருக்கும் மரக்கன்றுகள் அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகளில் வைத்து பராமரிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று மட்டும் 750 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மரங்களை நடுவதோடு மட்டும் இன்றி அந்த மரங்களை சுற்றி வேலி அமைத்தல் மற்றும் அந்த மரக்கன்றுகளுக்கான பராமரிப்பு பணிகளையும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாணவர்களே மேற்கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேசப்பற்றோடு இணையும்  அனைவரும்  சமூகப்பற்றையும் வளர்த்து  கொள்ள வேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 75-வது சுதந்திர தின விழா பசுமை விழாவாக கொண்டாடப் பட்டது என்று தெரிவித்துள்ளனர். இந்திய வரைபடம் பசுமையாக காட்சியளித்தது காண்போரை கண்கவர செய்தது. மேலும் இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட கல்வி அலுவலர், சிவகங்கை மாவட்ட ஏடிஎஸ்பி இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மரக்கன்று நடணும்.. அந்தந்த பகுதி மாணவர்கள் பராமரிக்கணும் - தென்காசியில் சூப்பர் சுதந்திர தினம்

கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் இன்றி சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர தினத்திற்காக தொடங்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இனி வரும் காலங்களிலும் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாசிக்க: 

Ola Electric Scooter: தீவிரமாக களமிறங்கும் மின்சார வாகனங்கள்.. சாதக, பாதகங்கள் என்னென்ன? 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget