மேலும் அறிய

HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி என விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்னுயிர்த் தம்பி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தார். அதனால் அவருக்கு யாரெல்லாம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தனது பதவில், “தமிழ்த் திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி! காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!”  என தெரிவித்துள்ளார். 

முன்னதாக விஜய் கட்சி தொடங்கிய போது அதனை முதல் ஆளாக வரவேற்றவர் சீமான் தான். தொடர்ந்து மக்களவை தேர்தலுக்குப் பின் நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் விஜய். மேலும் 2026 தேர்தலில் கொள்கைகள் ஒத்துப்போனால் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கும் எனவும் வெளிப்படையாக சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Embed widget