மேலும் அறிய
Advertisement
‘ஆளுநரின் சனாதன கொள்கை காலாவதியாகிவிட்டது’ - எம்பி டி.ஆர். பாலு பேச்சு
அம்மா உணவகத்தை அண்ணா உணவகமாக மாற்ற வேண்டுமென முதலமைச்சரிடம் நான் கோரிக்கை வைத்த பொழுது , முதலமைச்சர் காழ்ப்புணர்ச்சி அரசியல் வேண்டாம் என்று கூறினார்.
உலகில் மிகப்பெரிய அரசியல்வாதியை போல் ஆளுநர் சண்டி குதிரை போல் செயல்படுகிறார், திராவிட மாடல்காலாவதி ஆகவில்லை, ஆளுநரின் சனாதன கொள்கை தான் காலாவதியாகிவிட்டது அலுத்து போய் புழுத்துப் போய்விட்டது என எம்பி டி.ஆர்.பாலு பேசினார்.
இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காந்தி சாலையில் பெரியார் தூண் அருகில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ வுமான க.சுந்தர் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்ட மந்திர உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி உடன் இருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவின் போது கண் சிகிச்சை முகாமில் கண்ணாடி வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கண்ணாடிகளை எம்பி டி.ஆர்.பாலு வழங்கினார். இதனைத் தொடந்து அவர் பேசுகையில்,
அண்ணா உணவகமாக மாற்ற வேண்டுமென
மிகப்பெரிய மோசமான எதிரி என்றால் ஜெயலலிதா, அவர்களை எதிர்க்க வேண்டும் என்றால் மிகப்பெரிய மோசமான திட்டங்களை வகுத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும். உலக பிரசித்தி பெற்ற கத்திப்பாரா மேம்பாலம் அமைத்தது, திராவிட மாடலில் தொண்டர்களுக்கு முதல் முகம் போர்முகம், எதிரிகளை எதிரிகளாகவே பார்க்க வேண்டும் நண்பர்களாக பார்க்க கூடாது அப்படி பார்த்தால், ரகசியங்கள் எல்லாம் எதிரிகளுக்கு போய்விடும் தேர்தல் நேரங்களில் அடிபடும் என நாடாளுமன்ற குழு தலைவரும் திமுக பொருளாளர் காண டி.ஆர்.பாலு காஞ்சிபுரத்தில் பேசினார். அம்மா உணவகத்தை, அண்ணா உணவகமாக மாற்ற வேண்டுமென முதலமைச்சரிடம் நான் கோரிக்கை வைத்த பொழுது , முதலமைச்சர் காழ்ப்புணர்ச்சி அரசியல் வேண்டாம் என்று கூறினார். காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்படுவோம் என அம்மா உணவகம் என்றே இருக்கட்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
ஆளுநர் வேலை
அரசியலில் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் தான் வந்த வேலை விட்டுவிட்டு ஆளுநர் வேலை என்பது உறுதிமொழி ஏற்பது, அமைச்சரவை சொல்வதைக் செய்வது, அமைச்சரவையில் ஒப்புதலோடு செய்த சட்ட மசோதாகளை ஒன்று குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும், எதையெல்லாம் செய்யாமல் உலகில் பெரிய அரசியல்வாதியை போல ஆளுநர் சண்டி குதிரை போல், தான் எதற்கு வந்தோம் என்று தெரியாமல் திராவிடம் மாடல் காலாவதி ஆகிவிட்டது என்று கூறுகிறார், ஆளுநரின் சனாதன கொள்கை தான் காலாவதையாகி அலுத்து போய் புழுத்துப் போய்விட்டது என டி.ஆர்.பாலு பேச்சு.இக்கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்கேபி சீனிவாசன், மாநகராட்சி மூன்றாவது பகுதி செயலாளர் தசரதன் உட்பட கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion