
Rajiv Gandhi : திமுக அறிவித்த திடீர் அறிவிப்பு.. மாநில மாணவர் அணித்தலைவராக ராஜீவ் காந்தி நியமனம்!
திமுக மாணவர் அணித் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக மாணவர் அணித் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி வெளியான அறிக்கையில், “ தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர் செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
தி.மு.க. மாணவர் அணித் தலைவர் - செயலாளர் - இணைச் செயலாளர்கள் - துணைச் செயலாளர்கள் நியமனம்.
— DMK (@arivalayam) November 25, 2022
- தலைமைக் கழகம் அறிவிப்பு#DMK pic.twitter.com/Xw0it1Ddkd
இதையடுத்து, மாணவர் அணித் தலைவராக இரா. ராஜீவ்காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து, மாணவர் அணி செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன், மாணவர் அணி இணை செயலாளர்களாக பூவை சி. ஜெரால்டு, எஸ். மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
View this post on Instagram
மாணவர் அணி துணைச் செயலாளர்கள்:
- மன்னை த. சோழராஜன்
- ரா.தமிழரசன்
- அதலை பி.செந்தில்குமார்
- கா. அமுதரசன்
- பி.எம். ஆனந்த்
- கா.பொன்ராஜ்
- வி.ஜி. கோகுல்
- திருமதி பூர்ண சங்கீதா
- திருமதி ஜெ. வீரமணி
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

