மேலும் அறிய

2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!

EPS - Periyakulam: அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர் இன்னும் வெளிச்சத்திர்கு வரவில்லை என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் போட்டியிட்டு முதலமைச்சர்களாக பதவி வகித்த நிலையில், 2 பேர்தான் என ஓபிஎஸ் நீக்கி இபிஎஸ் பேசியாதாக கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன.

ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டமானது, அதிமுக சார்பில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று நடைபெற்றது. 

இபிஎஸ் தலைமையிலான அதிமுக கட்சியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், பலர் கட்சிக்குள் கலகம் செய்வதாகவும், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என இபிஎஸ்-க்கு எதிராக மூத்த தலைவர்களே வலியுறுத்துவதாகவும் பெரும் சர்ச்சை நிலவி வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பெரியகுளமானது, ஓபிஎஸ்-ன் சொந்த ஊர் என்பதால், இன்றைய பொதுக்கூட்டத்தை ,இபிஎஸ் தலைமையிலான அதிமுக அங்கு கூட்டம் நடத்துவது , ஓபிஎஸ்-க்கு சவால் விடுவதை போன்று இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும், தென் மாவட்டங்களில் , எனக்கு ஆதரவு இருக்கிறது என்பதை காண்பிக்கும் வகையில் இக்கூட்டத்தை இபிஎஸ் நடத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.

2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!

2 முதலமைச்சர்கள் கொடுத்தது தேனியா? 

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ தேனி மாவட்டம் இரண்டு முதலமைச்சர்களை கொடுத்துள்ளது என தெரிவித்தார். அதாவது, தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் போட்டியிட்டு முதலமைச்சர்களாக பதவி வகித்தனர். 

ஆனால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ், சில காலங்கள் 3 முறை முதலமைச்சராக இருந்தார். ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்.

தேனி மாவட்டத்தில் போட்டியிட்டு மூன்று பேர் முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஒன்று எம்.ஜி.ஆர் , இரண்டு ஜெயலலிதா மற்றும் மூன்றாவது ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ், ஜெயலலிதா சிறை சென்றபோது 2 முறை முதலமைச்சராகவும் ( செப்.21,2001- மார்ச் 2, 2002 ) ( 28 செப், 2014- 23 மே, 2015 ), மற்றும் மறைந்த போது ( டிச.6, 2016-16, 2017 ) முதலமைச்சராக பதவி வகித்தார். ஆனால்,  ஓபிஎஸ்-ஐ குறிப்பிடாமல் , 2 முதலமைச்சர்களை, தேனி கொடுத்துள்ளது என இபிஎஸ் தெரிவித்திருக்கிறார். 

மேலும், 1989-லிருந்து எம்.எல்.ஏ, நான்தான் சீனியர் என ஓபிஎஸ்-ஐ குறிப்பிடுவது போன்று பேசினார். மேலும், இங்கே ஒருத்தர் இருக்கிறார், அவர் ஒரு மூழ்கும் கப்பல் எனவும் இபிஎஸ் தெரிவித்தார். 

”இது ஸ்டாலின் மாடல்”

மேலும்,  தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாகவும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல்.

தேனி மாவட்டத்திற்கு பல நலத்திட்டங்களை கொடுத்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர் இன்னும் வெளிச்சத்திர்கு வரவில்லை என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget